ஏறாவூர் தௌஹீத் ஜமாஅத் சமூக சேவைப் பிரிவினரின் ஏற்பாட்டில மனிதநேயம் பேணும் இரத்ததான முகாம்

3பழுலுல்லாஹ் பர்ஹான்

ஏறாவூர்: ஏறாவூர் தௌஹீத் ஜமாஅத் சமூக சேவைப் பிரிவினரின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை27 மாபெரும் மனித நேயம் பேணும் இரத்ததான முகாமொன்று ஏறாவூர் அல் அஸ்ஹர் மகளிர் உயர்தரப் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

‘இரத்தம் கொடுத்து உயிரைக் காக்க உதவுவோம்’ எனும் தொனிப்பொருளில் காலை 08.00மணி முதல் மதியம் 01.00மணி வரை இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் தௌஹீத் ஜமாஅத்தின் தலைவர்,செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள், உலமாக்கள், ஊர்ப்பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதில் மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர் டாக்டர் ஜனாபா முஸம்மில் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்ட இவ் இரத்ததான நிகழ்வில் பெருமளவிலானோர்; தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினர்.

குறித்த ஏறாவூர் தௌஹீத் ஜமாஅத் சமூகத்தில் மக்களை ஆண்மீகத் துறையில் நல்வழிப்படுத்துவது மாத்திரமில்லாமல் இன,மத வேறுபாடுகளுக்கு அப்பால் பல்வேறு சமூக சேவைப் பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment