காங்கேயனோடை: ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் மாணவர்கள், இளைஞர்களின் அறிவு, ஆன்மீகம், திறன் என்பவற்றை விருத்தி செய்யும் நோக்கோடு பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை நாடளாவிய ரீதியில் மேற்கொண்டு வருகின்றுது.
இதனடிப்படையில் இவ் மாணவர் இயக்கத்தின் வருடாந்த நிகழ்வுகளில் ஒன்றான இவ்வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு எவ்வாறு பரீட்சைக்கு முகங்கொடுப்பது?, சுய ஊக்கமளிப்பு போன்ற விடயங்கள் தொடர்பாக அறிவூட்டும் செயலமர்வு மட்டக்களப்பு – ஆரையம்பதி – காங்கேயனோடை அல்-அக்ஷா வித்தியாலயத்தில் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் காத்தான்குடி கிளை அமைப்பாளர் இஸட்.எம்.சஜி தலைமையில் கடந்த திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் காத்தான்குடி கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் அறிவூட்டும் செயலமர்வில் காங்கேயனோடை அல்-அக்ஷா வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவ மாணவிகள் , அல்-அக்ஷா வித்தியாலய அதிபர் அப்பாஸ் நளீமி, ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் காத்தான்குடிக்கிளை உறுப்பினர்கள், ஆசிரிய ஆசிரியர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது பரீட்சைக்கு முகங்கொடுப்பது? எனும் தலைப்பில் பேராதனை பல்கழைக்கலக மைக்ரோ பயோலோஜி பிரிவு மாணவன் முஹமட் ஸப்றாஸினால் விரிவுரை நிகழ்த்தப்பட்டதுடன் , சுய ஊக்கமளிப்பு எனும் தலைப்பில் பொறியியல் பீட மாணவன் றிமாஸ் விரிவுரைகளை நிகழ்த்தினார்.
இத்திட்டம் முழு இலங்கையில் ஏறத்தாழ 65 இடங்களில் நடைபெற்றுக் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment