20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்; தொடக்க ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் மோதல்

டாக்கா: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை சந்திக்கிறது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பங்களாதேஷில் அடுத்த ஆண்டு (2014) மார்ச் 16ம் திகதி முதல் ஏப்ரல் 6ம் திகதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று முன்தினம் அறிவித்தது.

22 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 35 ஆட்டமும், பெண்கள் பிரிவில் 25 ஆட்டமும் நடக்கிறது. போட்டிகள் சிட்டகாங், டாக்கா, சியல்கோட் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. ஸ்டேடியம் தயாராவதில் தாமதம் ஏற்பட்டதால் காக்ஸ் பஜாரில் ஆட்டம் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவினருக்கான அரையிறுதிப் போட்டி மற்றும் இறுதிப் போட்டிகள் ஒரே நாளில் ஒரே இடத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபெறும்.

2012 ஆம் ஆண்டு அக்டோபர் 8ம் திகதி நிலவரப்படி 20 ஓவர் போட்டி தர வரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர் 10 சுற்றுக்கு தகுதி பெறும்.

இதன்படி ஆண்கள் பிரிவில் இலங்கை இங்கிலாந்து தென்னாபிரிக்க, நியூசிலாந்து (ஏ பிரிவு) நடப்பு சம்பியன் மே.தீவு, இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா (பி பிரிவு) ஆகிய அணிகள் சூப்பர் 10 சுற்றில் இடம்பெற்றுள்ளன.

எஞ்சிய 2 அணிகள் முதல் சுற்று ஆட்டம் மூலம் முடிவாகும். தர வரிசையில் முதல் 8 இடத்துக்குள் வராத பங்களாதேஷ் சிம்பாப்வே அணிகள் முதல் சுற்றில் விளையாடும். முதல் சுற்று ஆட்டங்கள் மார்ச் 16ம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணி சூப்பர் 10 சுற்றில் முறையே ‘ஏ’, ‘பி’ பிரிவில் இடம்பிடிக்கும்.

முதல் சுற்றில் பங்களாதேஷ் சிம்பாப்வேயுடன் விளையாடும் மற்ற 6 அணிகள் எவை என்பது ஐக்கிய அரபு எமிரேட்சில் அடுத்த மாதம் (நவம்பர்) 15ம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடைபெறும்.

20 ஓவர் உலக கோப்பை தகுதி சுற்று போட்டி மூலம் நிர்ணயமாகும்.

சுப்பர் 10 சுற்று மார்ச் 21ம் திகதி தொடங்குகிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் முன்னாள் சம்பியன் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் டாக்காவில் நடக்கிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ் வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குள் நுழையும். பெண் கள் பிரிவு ஆட்டங்கள் மார்ச் 23ம் திகதி முதல் ஏப்ரல் 6ம் திகதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப் பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், அயர்லாந்து அணிகளும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து மே.தீவு, இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகளும் இடம் பிடித்துள்ளன. tk

Published by

Leave a comment