வடக்கு முஸ்லிம்கள் இழந்தவற்றை பெற்றுக் கொடுக்க வேண்டிய காலத்தினை தவறவிட்டுவிட்டு அதனை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கும் தலைமைகளை இனவாதியாக காட்டிவிட்டு இன்று முதலைக் கண்ணீர் வடிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கிலும் அதற்கு வெளியிலும் சிறுபான்மை மக்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்கள் குறித்து கருத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று வவுனியா மாவட்ட தமிழ்-முஸ்லிம் இன ஒருமைப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து வவுனியா மாவட்ட அமைப்பின் தலைவர் அப்துல் பாரி வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது –
வடமாகாண சபை தேர்தல் பிரசாரங்களின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும்,வேட்பாளர்களும் தெரிவித்துவந்த கருத்துக்களை தற்போது அவர்கள் நடை முறைப்படுத்தப்பார்கிகன்றார்கள்.வடக்கில் இருந்து முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டது தொடக்கம் இன்று வரை இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மேற்கொண்டுவரும் முஸ்லிம் எதிர் பிரச்சாரங்களும்,மீள்குடியேற்றதிற்கான தடைகளையும் பட்டியலிட்டு கூறமுடியும்.அண்மைக்கால சம்பவங்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அய்யா அவர்களுக்கும்,பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களுக்கும் எமது அமைப்பு கடிதமொன்றினை வெவ்வேறாக அனுப்பி வைத்தது.
இந்திய வீடமைப்பு திட்டம் தொடக்கம்,முஸ்லிம்களது பள்ளவாசல் காணி விவகாரம் வரையும்,இதற்கு எதிராக செயற்படும் கூட்டமைப்பினரின் செயற்பாடுகள் தொடர்பில் தெளிவாக விளக்கப்படுத்தியுள்ளோம்.அதே வேளை செட்டிக்குளம் மெனிக்பார்ம் பகுதியில் இடம் பெயர்ந்து தங்கியிருந்த பல இலட்சம் தமிழ் மக்களை இனம்,மதம் என்ற பாகுபாடுகளின்ற இரவு பகல் பாராது அவர்களது மண்ணில் மீள்குடியேற்றம் செய்தவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தான் என்பதை பாராளுமன்ற உறுப்பினர் அரிய நேந்திரனுக்கு சொல்லி வைக்கவிரும்புகின்றேன்.தமிழ் மக்களை மீள்;குடியேற்றம் செய்யும் போது அவர்களுக்கு எதிராக சர்வதேச நாடுகளையும்,சில அரச சார்பற்ற நிறுவனங்களையும் நாடி அதனை தடுத்து நிறுத்தும் பணியினை செய்தவர்களின் பட்டியலில் அரிய நேந்திரன் எம்.பியும் இருந்திருப்பார் என்பதை தமிழ் மக்கள் நன்கறிவார்கள்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களை இனவாதியாக காண்பித்தும்,முஸ்லிம்களை தமிழின துரோகிகள் என்று தமிழ் மக்கள் மத்தியில் சென்று வங்குரோத்து அரசியல் செய்யும் நிலைக்கு அரிய நேந்திரன் தள்ளப்பட்டுள்ளதாக நாம் அறிகின்றோம்.அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர் ஒருவர் மீள்குடியேற்றத்திற்கு தடையாக இருக்கின்றார் என்று அமைச்சர் றிசாத் பதிதீனின் மீது அநாகரிமான பொருப்பற்ற விமர்சனங்களை செலுத்தும் நோக்கமாக வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தாங்கிக் கொள்ளமுடியாத தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் குறித்து பிழையான தகவல்களை கொண்டு செல்வதாகவே நாம் எதிர்பார்க்கிகன்றோம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
![Rishad-Bathiudeen-3[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/rishad-bathiudeen-31.jpg?w=150&h=99)
Leave a comment