-
க .பொ .த {உ/த} வர்தகப்பிரிவில் கல்வி கற்கும் காத்தான்குடி மாணவி 19வயதுக்குற்பட்ட மகளிருக்கான குண்டெறிதல் போட்டியில் மாகாண மட்டத்தில் மூன்றாம் இடம்!
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி மட்/மீராபாலிகா தேசியப் பாடசாலை க .பொ .த {உ/த} வர்தகப்பிரிவில் கல்வி கற்கும் ABM. றசீட் கான், பர்சானா ஆகியோரின் சிரேஸ்ட புதல்வி, சுஜிதா ரசீட்காண் எனும் மாணவி கிழக்குமாகாண கல்வித்திணைக்களத்தினால் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்டவு Trach & field Champion ship-2014 19வயதுக்குற்பட்ட மகளிருக்கான குண்டெறிதல் போட்டியில் மாகாண மட்டத்தில் மூன்றாம் இடத்துக்கு வெற்றி பெற்று தேசியமட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
-
சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தினர் கைது!
– AF-80 சென்னை: இலங்கையில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.இலங்கையின் அளுத்கம, பேருவளை ஆகிய இடங்களில் சிங்கள தீவிரவாதக் குழுக்கள் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினர்.
-
இலங்கையில் முஸ்லிம்கள் படுகொலை- இந்திய அரசு தலையிட திருமாவளவன் கோரிக்கை
– S-90 சென்னை: இலங்கையில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு கடும் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
-
அளுத்கம சம்பவங்களை கண்டித்து காத்தான்குடியில் -ஹர்த்தால் மற்றும் கடையடைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கடந்த 15-06-2014ம் திகதி அளுத்கம ,பேருவளை,தர்கா நகர் மற்றும் களுத்துறை போன்ற முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் பொது பல சேனா அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட காடைத்தனமான வன்முறைக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி,ஏறாவூர்,ஓட்டமாவடி போன்ற முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால் மற்றும் கடையடைப்பு என்பன இடம்பெற்றது.
-
அழிவு நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக ஆவணப்படுத்தல்படல் வேண்டும்: NFGG
– NFGG தர்ஹாநகர்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களான அஷ்ஷெய்க் MR.நஜா முஹம்மத் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஷ்ஷெய்க் அய்யூப் அஸ்மின் ஆகியோர் மேற்கொண்டிருந்த அளுத்கமவிற்கான கள விஜயத்தில் தற்போது தர்கா நகரிற்குள் பிரவேசித்துள்ளனர்.
-
பொதுபலசேனாவின் காடைத்தனத்தைக் கண்டித்து காத்தான்குடியில் இடம்பெற்ற பாரிய கண்டனப் பேரணி
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கடந்த 15-06-2014ம் திகதி அளுத்கம ,பேருவளை,தர்கா நகர் மற்றும் களுத்துறை போன்ற முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் பொது பல சேனா அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட காடைத்தனமான வன்முறைக்கு எதிராக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா என்பன இணைந்து 17-06-2014 இன்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடியில் பாரிய கண்டனப் பேரணியை அமைதியான முறையில் நடாத்தியது.
-
பொலிஸார் கடைகளைத் திறக்க அறிவிப்புச் செய்தும் அளுத்கம சம்பவத்தை கண்டித்து இன்று ஏறாவூரில் கடையடைப்பு
– ஏறாவூர் அபூ பயாஸ் அளுத்கம: அளுத்கம, தர்ஹா நகர் வெலிப்பண்ணை மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் வன்முறை சம்பவங்களை வண்மையாக கண்டித்து இன்று (17) செவ்வாய்க்கிழமை ஹர்த்தால் ஒன்றை அனுஷ்டிக்குமாறு கோரி ஏறாவூரில், நேற்று திங்கட்கிழமை இரவு துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியாகி இருந்தது.
-
வெலிப்பனையில் 10 கடைகள் உடைக்கப்பட்டுள்ளன!
– SHM களுத்துறை: களுத்துறை மாவட்டம் வெலிப்பனை கிராமத்தில் நேற்றிரவு புகுந்த பேரினவாதக் காடையர் கும்பல் குழு, அங்குள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான 10 கடைகளை உடைத்து இருப்பதாக அழுத்கமையிலிருந்து சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.
-
வெலிப்பெனையில் பள்ளிவாயல் மற்றும் கோழிப்பண்ணை தகர்க்கப்பட்டது!!
– SHM வெலிப்பன: களுத்துறை வெளிப்பனையில் முகமட் ஷியாம் என்பவருடைய கோழிப்பண்ணை பேரினவாதிகளால் எரிக்கப்பட்டு தீப்பற்றிக் கொண்டிருக்கிறது. வெலிப்பன்ன பள்ளிவாயலும் உடைக்கப்பட்டிருப்பதாக அழுத்கமையிலிருந்து வாசகர் ஒருவர் செய்தி அனுப்பியிருக்கிறார்.
-
வெலிப்பெனையில் பலமான துப்பாக்கி வெடியோசைகள்: குழந்தைகளும், பெண்களும் கதறியழுகின்றனர்!
– SHM களுத்துறை-வெலிப்பென்ன முஸ்லிம் பகுதியில் தற்பொழுது துப்பாக்கி வெடியோசை கேட்கிறதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வெடியோசையைக் கேட்டு, குழந்தைகளும், பெண்களும் கதறி அழுவதாகவும் வெலிப்பெனைக்கு வெளியிலுள்ளோர்கள் செய்திகளை அனுப்பி வருகின்றனர்.
-
காலத்தின் தேவை கருதி காத்தான்குடியில் சற்று முன்னர் வெளியான துண்டுப்பிரசுரம்!
– MF பர்ஹான் காத்தான்குடி: அளுத்கம, தர்ஹா நகர் மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை வண்மையாக கண்டித்து நாளை 17-06-2014 செவ்வாய்க்கிழமை ஹர்த்தால் ஒன்றை அனுஷ்டிக்குமாறு கோரி காத்தான்குடியில் நேற்று திங்கட்கிழமை இரவு வெளியான துண்டுப்பிரசுரம் எமது வாசகர்களுக்காக.