பொலிஸார் கடைகளைத் திறக்க அறிவிப்புச் செய்தும் அளுத்கம சம்பவத்தை கண்டித்து இன்று ஏறாவூரில் கடையடைப்பு

eravur– ஏறாவூர் அபூ பயாஸ்

அளுத்கம: அளுத்கம, தர்ஹா நகர் வெலிப்பண்ணை மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் வன்முறை சம்பவங்களை வண்மையாக கண்டித்து இன்று (17) செவ்வாய்க்கிழமை ஹர்த்தால் ஒன்றை அனுஷ்டிக்குமாறு கோரி ஏறாவூரில், நேற்று திங்கட்கிழமை இரவு துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியாகி இருந்தது.

இத்துண்டு பிரசுரம் யாரால் வெளியிடப்பட்டது என்பது தெரியாமல் இருந்தாலும், ஏறாவூர் பொலிசார் ஒவ்வொரு பள்ளிவாசல்கள் ஒலி பெருக்கிமூலமும், கடைகளை திறக்குமாறு அறிவிப்பு செய்துகொண்டிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

ஆனாலும் இதுவரைக்கும் ஏறாவூரில் எந்தவொரு கடைகளும் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

eravur

eravur (2)

eravur (3)

Published by

Leave a comment