காத்தான்குடி: கடந்த 15-06-2014ம் திகதி அளுத்கம ,பேருவளை,தர்கா நகர் மற்றும் களுத்துறை போன்ற முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் பொது பல சேனா அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட காடைத்தனமான வன்முறைக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி,ஏறாவூர்,ஓட்டமாவடி போன்ற முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால் மற்றும் கடையடைப்பு என்பன இடம்பெற்றது.
இதே வேளை கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடி பிரதேசத்திலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து பிரதேசத்தின் கடைகள் அரச’தனியார் வங்கிகள், பாடசாலைகள் ‘பொதுச் சந்தைகள் மூடப்பட்டுள்ளதுடன் அரச அலுவலகங்கள் யாவும் செயலிழந்துள்ளதுடன் பயணிகள் போக்குவரத்துகள் மிகவும் அரிதாக காணப்பட்டு வருவதுடன் பொலிசாரும் ‘இரானுவத்தினரும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பு அளுத்கம, தர்ஹா நகர் மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்று வன்முறைச் சம்பவங்களை வண்மையாக கண்டித்து இன்று 17-06-2014 செவ்வாய்க்கிழமை ஹர்த்தாலொன்றை அனுஷ்டிக்குமாறு கோரி காத்தான்குடியில் நேற்று திங்கட்கிழமை இரவு துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment