களுத்துறை: களுத்துறை மாவட்டம் வெலிப்பனை கிராமத்தில் நேற்றிரவு புகுந்த பேரினவாதக் காடையர் கும்பல் குழு, அங்குள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான 10 கடைகளை உடைத்து இருப்பதாக அழுத்கமையிலிருந்து சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.
உடைக்கப்பட்ட சில கடைகளுக்கு தீ வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும், பள்ளிவாயலும், முஸ்லிம் சகோதருக்குச் சொந்தமான கோழிப்பண்ணை ஒன்றும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
சம்பவங்களை வெளியில் சென்று அறியமுடியாத அச்ச சூழ்நிலை தற்பொழுது அங்கு நிலவுவதாகவும் அறியமுடிகிறது. (file image)
Published by

Leave a comment