யுத்த நிறுத்தத்திற்கு ஹமாஸ் மறுப்பு: காசாவில் மீண்டும் கடுமையான தாக்குதல்கள் ஆரம்பித்துள்ள இஸ்ரேல்!

gazaஜெரூஸலம்: காஸாவில் இஸ்ரேல் தனது இராணுவ தாக்குதல்களை மீண்டும் ஆரம்பித்துள்ளது. காசாவின் பல பகுதிகளிலும் பாரிய பீரங்கி குண்டுச் சத்தங்களை கேட்கக்கூடியதாக உள்ளது.இஸ்ரேலிய ஷெல் தாக்குதல் மீண்டும் ஆரம்பித்த நிலையில் மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று காஸா அதிகாரிகள் கூறுகின்றனர்.

இருபத்து நான்கு மணி நேரங்களாக நேற்றைய மனிதாபிமான தாக்குதல் இடைநிறுத்தத்தை நீடிக்க இஸ்ரேல் சம்மதித்திருந்தாலும் ஹமாஸ் அதனை நிராகரித்துவிட்டு காஸாவிலிருந்து இஸ்ரேல் அதன் மீது ரொக்கெட் வீச ஆரம்பித்திருந்தது.

இஸ்ரேலிய துருப்பினர் பலஸ்தீன நிலப்பரப்பில் இருக்கும் வரையில் தாம் சண்டையை நிறுத்தப்போவதில்லை என்று ஹமாஸ் கூறியிருந்தது.

நேற்றிரவு மோர்டார் தாக்குதல் ஒன்றில் இஸ்ரேலிய இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹமாஸ் முன்வைத்த கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் சம்மதித்தால் மாத்திரமே யுத்த நிறுத்தம் என ஹமாஸ் உறுதிநிலைப்பாட்டுடன் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment