-
‘ பலஸ்தீன் : யூதர்களின் உரிமையா? ‘ காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாயலில் வெள்ளிக்கிழமை விஷேட மார்க்க தெளிவுரை மகாநாடு
SL Youth அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். காலத்தின் தேவைகருதி இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 08/08/2014 அதாவது வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகையை தொடர்ந்து காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் ‘பலஸ்தீன் : யூதர்களின் உரிமையா?’ என்ற தலைப்பில் அஷ்ஷெய்க் MHM. யஹ்யா (பலாஹி, பின்னூரி) அவர்களால் ஆண்களுக்கான விஷேட மார்க்க தெளிவுரை மகாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
இனவாதத்தை தூண்டும் குறுஞ்செய்தி பகிர்ந்ததாக நான்கு முஸ்லீம்கள் கைது!
கொழும்பு: இலங்கை முஸ்லிம்களுக்குள் பீதியை ஏற்படுத்தக்கூடிய செய்தியை தொலைபேசி குறுஞ்செய்தி (SMS) மூலம் பரப்பியதாக குற்றம் சாடப்பட்டு நான்கு முஸ்லிம்கள் கொழும்பில் கைது செய்யப்பட்டனர். இவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
எபோலா வைரஸ்: மரணத்தைத் தழுவிய முதலாவது சவுதி நபர்!
– MJ ஜித்தா: உலகெங்கிலும் அச்சத்தை ஏற்படுத்திவரும் ஆட்கொல்லி புதிய வைரஸான ‘எபோலா’, தற்பொழுது சவுதி அரேபியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. எபோலா வைரஸ் தாக்கப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தினடிப்படையில் ஜித்தா மருத்துவமைனயில் அனுமதிக்கப்பட்டிருந்த சவுதி நபர் இன்று புதன்கிழமை மரணத்தைத் தழுவினார்.
-
பெண்ணின் வயிற்றிலிருந்த 152 இரும்புப் பொருட்களை சத்திரசிகிச்சை மூலம் அகற்றி சென்னை வைத்தியர்கள் சாதனை!
சென்னை: மனநல பாதிப்பால் கையில் கிடைத்த சிறிய இரும்புப் பொருட்களையெல்லாம் சாப்பிட்ட பெண்ணின் வயிற்றிலிருந்து சுமார் 152 இரும்புப் பொருட்களை வெளியே எடுத்து சென்னை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
-
ஊவா மாகாணத்திற்கான தேர்தலில் NFGG வேட்பாளர்களை நிறுத்துவதில்லை எனத் தீர்மானம்
– PMGG ஊடகப்பிரிவு பதுளை: ஊவா மாகாணத்திற்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் கடைசித் தினமான இன்று (06.08.2014) நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், தாம் ஊவா மாகாணத்திற்கான தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை எனத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
-
காஸா மக்களுக்கு குரல் கொடுத்தமைக்காக பணிநீக்கம் செய்யப்பட்ட பி.பி.சி. செய்தியாளர்!
– AF -90 லண்டன்: இஸ்ரேலின் கடும் நெருக்கடியால் மத்திய கிழக்கு நாடுகளுக்கான பிபிசியின் செய்தி ஆசிரியராக இருந்த ஜெரிமி போவென் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சவூதி ஆண்களுக்கு திடீர் ‘திருமணத் தடை’
ரியாத்: சவூதி அரேபிய அரசு சில நாடுகளில் வசிக்கும் சவூதி அரேபியப் பெண்களை தங்களது நாட்டு ஆண்கள் மணக்க தடை விதித்துள்ளது.அதன்படி பாகிஸ்தான், வங்கதேசம், சாட் மற்றும் மியான்மர் நாட்டுப் பெண்களை சவூதி அரேபிய ஆண்கள் திருமணம் செய்யக் கூடாது.
-
அமெரிக்க சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஆப்கானிஸ்தானில் சுட்டுக் கொலை!
– AF-90 வாஷிங்டன்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்க ராணுவத்தின் மிகப்பெரிய பொறுப்பில் உள்ள தளபதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 2001 பென்டகன் தாக்குதலுக்கு பிறகு அமெரிக்காவின் மிகப்பெரிய அதிகாரி தாக்குதலில் கொல்லப்பட்டது இதுதான் முதன்முறையாகும்.
-
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் புதிய பொலிஸ் பொறுப்பதிகாரியாக ஏ.பி.வெதகெதர நியமனம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் புதிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக ஏ.பி.வெதகெதர 06-08-2014 இன்று புதன்கிழமை காலை -06.06 மணிக்கு தனது கடமைகளை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வைத்து பொறுப்பேற்றார்.
-
தேசிய தவ்ஹீத் ஜமாஅத் நடாத்தும் சமுதாய விழிப்புணர்வு மாநாடு
– NTJ காத்தான்குடி: இம்மாநாட்டில் முக்கிய மூன்று சிறப்பம்சங்கள் இடம் பெறவுள்ளன முதலாவது: யூதர்களின் சதித்திட்ட வரலாறு மற்றும் சூழ்ச்சிகள் வீடியோக்களாக காண்பிக்கப்படும்.
-
ஏற முற்படும்போது ஓடுபாதையில் புதையுண்ட சவுதி அரேபியன் எயார்லைன்ஸ்!
– MJ மனிலா: பலத்த மழை பெய்துகொண்டிருக்கும் நிலையில் 298 பயணிகளுடன் பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மனிலா விமான நிலையத்தலிருந்து றியாத் நோக்கி புறப்படத் தயாராகவிருந்த சவுதி அரேபியா விமானம் ஓடுபாதையின் சேற்றில் புதையுண்டு கட்டுப்பாட்டை இழந்தது.
-
அறுவடை விழாவும் மர நடுகை நிகழ்வும்
ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: தாமரக்கேர்னி, சவக்கடி வீதியில் அமைந்துள்ள ஜனாப் ULM. அப்துல் ரஹ்மான் என்பவரின் சுய முயற்சியினால் நடப்பட்டு விளைவிக்கப்பட்ட காய்கறிகள் அறுவடை நிகழ்வும், புதிய மர நடுகையும் ஏறாவூர் நகர விவசாய போதனா ஆசிரியர் முர்ஷிதா ஷிரீன் தலைமையில் இன்று காலை இடம் பெற்றது.