ஏற முற்படும்போது ஓடுபாதையில் புதையுண்ட சவுதி அரேபியன் எயார்லைன்ஸ்!

plane– MJ

மனிலா: பலத்த மழை பெய்துகொண்டிருக்கும் நிலையில் 298 பயணிகளுடன் பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மனிலா விமான நிலையத்தலிருந்து றியாத் நோக்கி புறப்படத் தயாராகவிருந்த சவுதி அரேபியா விமானம் ஓடுபாதையின் சேற்றில் புதையுண்டு கட்டுப்பாட்டை இழந்தது.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சவுதி அரேபியன் போயிங் 747 ரக, எஸ்.வி.871 இலக்க விமானமே இவ்வாறு புதையுண்டது.

இச்சம்பவத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை. எனினும் ஓடுபாதை தடைப்பட்டதால் ஏற, இறங்கவிருந்த 11 விமானங்கள் தடைப்பட்டதாக மனிலா விமான நிலைய அதிகார சபை தெரிவித்தது.

plane

 

Published by

Leave a comment