எபோலா வைரஸ்: மரணத்தைத் தழுவிய முதலாவது சவுதி நபர்!
– MJ
ஜித்தா: உலகெங்கிலும் அச்சத்தை ஏற்படுத்திவரும் ஆட்கொல்லி புதிய வைரஸான ‘எபோலா’, தற்பொழுது சவுதி அரேபியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. எபோலா வைரஸ் தாக்கப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தினடிப்படையில் ஜித்தா மருத்துவமைனயில் அனுமதிக்கப்பட்டிருந்த சவுதி நபர் இன்று புதன்கிழமை மரணத்தைத் தழுவினார்.
இப்றாஹீம் அல் ஸஹ்ரானி எனும் 40 வயதுடைய சவுதி வர்த்தகரே எபோலா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி மரணத்தைத் தழுவியுள்ளார். கடுமையான காய்ச்சல் காரணமாக கடந்த திங்கட்கிழமை இரவு, ஜித்தா மன்னர் ஃபஹ்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித நபர் பல நாட்களாக உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் விசேட வெளிநாட்டு மருத்துவர்கள் கொண்ட குழுவினரால் சிகிச்சையளிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தார். அவரது மருத்து ஆவணங்களை அமெரிக்கா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கும் அனுப்பி ஆய்வு செய்யப்பட்ட நிலையில் இன்று மரணத்தை தழுவினார்.
மன்னர் ஃபஹ்த் மருத்துவமனை, ஜித்தா
எபோலா வைரஸ் தாக்கத்தில் முதன் முதலாக மரணத்தைத் தழுவும் சவுதிப் பிரஜையாக அல் ஸஹ்ரானி பதியப்படுகிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் எபோலா வைரஸ் உலகில் கண்டறியப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சவுதி அரேபியாவுக்குள் வரும் யாத்திரிகர்கள், பணியாளர்கள் மற்றும் விருந்தினர்கள் அனைவருக்கும் கடுமையான மருத்துவ சான்றிதழ் விதிகளை சவுதி அமல்படுத்தியிருந்தது. விசேடமாக ஜித்தா விமான நிலையத்தில் வைத்தியக் குழு இரவு பகலாக செயற்பட்டு, மருத்துவச் சான்றிதழ்களையும், பயணிகளையும் சோதித்து வந்தது.
இம்முறை ஹஜ் வரும் யாத்தரிகர்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகளும், மருத்துவச் சான்றிதழ்களும் மிக அவசியமாக பரிசீலிக்கப்படுவதுடன், உந்நாட்டு பிரஜைகளுக்கும் மருத்துவ ஆலோசனைகளைகளை உள்ளுர் மருத்துவ அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment