அறுவடை விழாவும் மர நடுகை நிகழ்வும்

unnamedஏறாவூர் அபூ பயாஸ்

ஏறாவூர்: தாமரக்கேர்னி, சவக்கடி வீதியில் அமைந்துள்ள ஜனாப் ULM. அப்துல் ரஹ்மான் என்பவரின் சுய முயற்சியினால் நடப்பட்டு விளைவிக்கப்பட்ட காய்கறிகள் அறுவடை நிகழ்வும், புதிய மர நடுகையும் ஏறாவூர் நகர விவசாய போதனா ஆசிரியர் முர்ஷிதா ஷிரீன் தலைமையில் இன்று காலை இடம் பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாகாண விவசாய பணிப்பாளர் ஜனாப் எஸ்.எம்.ஹுசைன் அவர்களும், ஏனைய அதிதிகளாக மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் திரு கே. கரீஹரன், மட்டக்களப்பு பிரதி விவசாயப் பணிப்பாளர் திரு கோகுலதாசன், ஏறாவூர் ஆதார வைத்தியசாலை பொறுப்பாளர் டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் ஆகியோரோடு இன்னும் பல உயரதிகாரிகளும், ஆர்வமுள்ள விவசாயிகளும் கலந்து சிறப்பித்தனர்.

முடிவில் இவ்வதிதிகளால் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையிலும் மர நடுகை நிகழ்வு இடம் பெற்றது. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment