காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் புதிய பொலிஸ் பொறுப்பதிகாரியாக ஏ.பி.வெதகெதர நியமனம்

police oic– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் புதிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக ஏ.பி.வெதகெதர 06-08-2014 இன்று புதன்கிழமை காலை -06.06 மணிக்கு தனது கடமைகளை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வைத்து பொறுப்பேற்றார்.

இங்கு விஷேட துஆ பிரார்த்தனையை மட்டக்களப்பு ,காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபைகளின் தலைவரும், காழி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.எம். அலியார் (பலாஹி) நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள், நகர சபை உறுப்பினர்கள், பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய அஜித் பிரசன்ன பெஹலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இடம்மாற்றம் செய்யப்பட்டதையடுத்தே இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் ஏ.பி.வெதகெதர காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் புதிய பொலிஸ் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

police oic
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர

police

police (2)

Published by

Leave a comment