-
‘எமது டிவிட்டர் கணக்குகளை முடக்கினால் டிவிட்டரில் வேலை செய்வோர் படுகொலை செய்யப்படுவார்கள்’-இஸிஸ்
நியுயோர்க்: இஸிஸ் போராளிகளின் டிவிட்டர் கணக்குகளை முடக்கினால் டிவிட்டரில் வேலை செய்வோர் படுகொலை செய்யப்படுவார்கள் என்று இஸிஸ் அமைப்பு எச்சரிக்கைவிடுத்துள்ளது.
-
மட்டக்களப்பு மாவட்ட உலமாக்களுக்கான ஒரு நாள் செயலமர்வு
– அல் மனார் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட உலமாக்களுக்கான ஒரு நாள் செயலமர்வொன்று எதிர்வரும் 13.09.2014 சனிக்கிழமை அல் மனார் நிறுவனத்தில் இடம்பெறவுள்ளதாக அந்நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனி தெரிவித்தார்.
-
காத்தான்குடி சமாதான ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குழாய்க் கிணறுகள் கையளிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி சமாதான ஒன்றியத்தின் (KATTANKUDY PEACE FOUNDATION) ஏற்பாட்டில் வறிய குடும்பங்களுக்கு குழாய்க் கிணறுகள் கையளிக்கம் நிகழ்வு அணுசரனையாளர்களின் பங்கு பற்றலுடன் காத்தான்குடி, ஏறாவுர், பாலமுனை மற்றும் மஞ்சன்தொடுவாய் போன்ற பிரதேசங்களில் கடந்த செவ்வாய்க் கிழமை இடம் பெற்றது.
-
கூட்டிணையுங்கள், போராடுங்கள், நாம் துணையிருப்போம் – தமிழரசு கட்சி மாநாட்டில் மனோ கணேசன்
பழுலுல்லாஹ் பர்ஹான் வவுனியா: தமிழரசு தலைவராக பதவியேற்றுள்ள அண்ணன் மாவை சேனாதிராசாவுக்கு வாழ்த்துக்களுடன் இரண்டு யோசனைகளை முன்வைக்க விரும்புகின்றேன். முதலாவது, வடக்கு கிழக்கு தமிழர்கள், மலையக தமிழர்கள், முஸ்லிம் மக்கள், புலம் பெயர் தமிழர்கள், தமிழ்நாட்டு ஆதரவு சக்திகள், சிங்கள முற்போக்கு சக்திகள் ஆகிய ஆறு தரப்பினரையும் கூட்டிணைக்கும் பொறிமுறை ஒன்றை தோற்றுவியுங்கள். இரண்டாவது, 1960 களில் தந்தை செல்வா காலத்தில் தமிழரசு கட்சி முன்னெடுத்த அறவழி போராட்ட வரலாற்றை மீண்டும் இன்று எழுதுங்கள் என ஜனநாயக…
-
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஆலோசனைக்கு அமைய மாங்குளத்தில் பயணிகள் ஓய்வகம், கைவினை பொருள் விற்பனை நிலையத்திற்கு அடிக்கல்
பழுலுல்லாஹ் பர்ஹான் மாங்குளம்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஆலோசனையுடன் ஏ9 மாங்குளம் பகுதியில் பயணிகள் ஓய்வகம் மற்றும் கைவினை பொருள் விற்பனை நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. முன்பதாக பிரதான வாயிலில் அமைச்சர் உள்ளிட்ட அதிதிகள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய கட்டிடம் அமையப் பெறவுள்ள பகுதிக்கு அதிதிகள் அழைத்து வரப்பட்டனர்.
-
எமது கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் ஊடுருவலை தடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீர்வு! அமைச்சரவைப் பத்திரம் தாக்கல்
பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: வடபகுதி கடற்பரப்பில் எமது மீனவர்களின் சொத்துக்களும், கடல்வளமும், வாழ்வாதாரமும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய ஊடுருவலால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு தீர்வு காணும் பொருட்டு தொடர்ந்தும் குரல் கொடுத்து வரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சரவைப் பத்திரமொன்றை தாக்கல் செய்துள்ளார்.
-
உயர் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி சாய்ந்தமருதில்
பழுலுல்லாஹ் பர்ஹான் சாய்ந்தமருது: உயர் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி எதிர்வரும் சனி (13), ஞாயிறு (14) ஆகிய தினங்களில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் ஸம்ஸ் லங்கா ஹோல்டிங் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற ஏற்பாடகியுள்ளது.
-
மொனஸ் ஆங்கில அகடமியின் 2014 வருடாந்த பரிசளிப்பு விழா
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி மொனைஸ் ஆங்கில அகடமியின் 2014 வருடாந்த பரிசளிப்பு விழா அண்மையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் மொனஸ் ஆங்கில அகடமியின் பணிப்பாளர் ஏ.சி. அஷ்றப் அலியின் ஒருங்கிணைப்பில் மொனஸ் ஆங்கில அகடமியின் அதிபர் ஜனாபா ஹில்மியா முபீன் தலைமையில் இடம்பெற்றது.
-
3வது கல்குடா பிறிமியர் லீக் கிறிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் வெற்றியையும் கிண்ணத்தையும் ஒட்டமாவடி வளர்பிறை விளையாட்டுக் கழகம் தனதாக்கிக் கொண்டது
பழுலுல்லாஹ் பர்ஹான் ஒட்டமாவடி: வாழைச்சேனை நிவ் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த ஒன்றரை மாத காலமாக ஒட்டமாவடி அமீர் அலி விளையாட்டு அரங்கில் 24 விளையாட்டு கழகங்கள் பங்கேற்று விளையாடிய 20 ஓவர் கொண்ட 3வது கல்குடா பிறிமியர் லீக் கிறிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் நேற்று 08-09-2014 திங்கட்கிழமை ஒட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
-
ஒட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்திற்கு சுற்று மதில் வேலி அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் ஒட்டமாவடி: முன்னாள் அனர்த்த நிவாரன சேவைகள் அமைச்சரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலியின் முயற்சியின் பயனாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கிராமத்துக்கு ஒரு வேளைத்திட்டம் செயற்திட்டத்தின் கீழ் 10 இலட்சம் ரூபாய் செலவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப் பற்று மேற்கு ஒட்டமாவடி பிரதேச சபைக்கு சொந்தமான ஒட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்திற்கு சுற்று மதில் வேலி அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 08-09-2014 நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.
-
மாபெரும் கால் பந்தாட்டப் போட்டி
-டீன்பைரூஸ்- காத்தான்குடி: காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏட்பாட்டினில் மாபெரும் சினேக புர்வ கால் பந்தாட்டப் போட்டி ஒன்று இன்று (09.09.2014 செவ்வாய்க்கிழமை)பி.ப. 04.00 மணிக்கு காத்தான்குடி தேசிய பாடசாலை மைதானத்தினில் நடை பெற இருப்பதாக கழகத்தின் தலைவர் MSM அஸ்ஹா் JP தெரிவித்தார்.
-
பிஸ்மி இஸ்லாமிய பாடசாலையின் 2014 வருடாந்த பரிசளிப்பு விழா
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நகரில் மிக சிறப்பாக இயங்கிவரும் பிஸ்மி இஸ்லாமிய பாடசாலையின் 2014 வருடாந்த பரிசளிப்பு விழா அண்மையில் புதிய காத்தான்குடி கடற்கரை கடாபி பீச் கார்டனில் இடம்பெற்றது. பிஸ்மி இஸ்லாமிய பாடசாலையின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.நுஸ்ரி நளீமி தலைமையில் இடம்பெற்ற இவ் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக பொத்துவில் மாவட்ட நீதி மன்றத்தின் நீதவான் அஷ்ஷெய்க் ஐ. நௌபல் ரிஸ்வான் கலந்து கொண்டார்.