மொனஸ் ஆங்கில அகடமியின் 2014 வருடாந்த பரிசளிப்பு விழா

unnamed2பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி மொனைஸ் ஆங்கில அகடமியின் 2014 வருடாந்த பரிசளிப்பு விழா   அண்மையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில்  மொனஸ் ஆங்கில அகடமியின் பணிப்பாளர் ஏ.சி. அஷ்றப் அலியின் ஒருங்கிணைப்பில் மொனஸ் ஆங்கில அகடமியின் அதிபர் ஜனாபா ஹில்மியா முபீன்  தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது பல்வேறு ஆங்கில பரீட்சைகளில் திறமையான புள்ளிகளைப் பெற்ற  மாணவர்கள் அதிதிகளினால் சான்றிதழும், பதக்கமும், கிண்ணங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு மொனைஸ் ஆங்கில அகடமி மாணவ மாணவிகளின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் பாட்டு, கதை, கவிதை, நாடகம், பேச்சு போன்ற பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

இப்பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக முன்னாள் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிரின்ஸ்ஜி காசிநாதர் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக காத்தான்குடி பிரதேச கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.சீ.எம். பதுறுத்தீன், காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆங்கில பாட ஆசிரிய ஆலோசகர் ஐ.எம்.மர்சூக் , முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல் நளீமி , இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட  புலனாய்வு அதிகாரி ஏ.சி.ஏ. அஸீஸ், முன்னாள் காத்தான்குடி பிரதேச கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.எம். சுபைர்  உட்பட பாடசாலை அதிபர்கள், ஆங்கில ஆசிரியர்கள் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment