3வது கல்குடா பிறிமியர் லீக் கிறிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் வெற்றியையும் கிண்ணத்தையும் ஒட்டமாவடி வளர்பிறை விளையாட்டுக் கழகம் தனதாக்கிக் கொண்டது

unnamed7பழுலுல்லாஹ் பர்ஹான்

ஒட்டமாவடி: வாழைச்சேனை நிவ் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த ஒன்றரை மாத காலமாக ஒட்டமாவடி அமீர் அலி விளையாட்டு அரங்கில் 24 விளையாட்டு கழகங்கள் பங்கேற்று விளையாடிய 20 ஓவர் கொண்ட 3வது கல்குடா பிறிமியர் லீக் கிறிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் நேற்று 08-09-2014 திங்கட்கிழமை ஒட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

வாழைச்சேனை நிவ் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.எப்.ஜவ்பர் தலைமையில் இடம்பெற்ற இவ் இறுதிப் போட்டியில் வாழைச்சேனை நிவ் ஸ்டார் விளையாட்டுக் கழகமும், ஒட்டமாவடி வளர்பிறை விளையாட்டுக் கழகமும் மோதின.

இதில் முதலில் துடுப்படுத்தாடிய வாழைச்சேனை நிவ் ஸ்டார் விளையாட்டுக் கழகம் 20 ஓவரில் 127 ரன்களுக்கு 5 விக்கட்டுக்களை இழந்தது. பதிலுக்கு துடுப்படுத்தாடிய ஒட்டமாவடி வளர்பிறை விளையாட்டுக் கழகம் 14 ஓவரில் 129 ரன்களுக்கு 4 விக்கட்டுக்களை இழந்து 6 விக்கட் வித்தியாசத்தில் ஒட்டமாவடி வளர்பிறை விளையாட்டுக் கழகம் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

இதன் போது நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி  ஒட்டமாவடி வளர்பிறை விளையாட்டுக் கழகத்திற்கு முதலாவது வெற்றிக் கிண்ணத்தையும் , பதக்கத்தையும் வழங்கி வைத்தார் அத்தோடு இரண்டாவது வெற்றிக்கிண்ணத்தையும், பதக்கத்தையும் நிகழ்வில் விஷேட அதிதியாக கலந்து கொண்ட  கோறளைப் பற்று மேற்கு ஒட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கோறளைப் பற்று மேற்கு ஒட்டமாவடி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம். றுவைத் , மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ரீ.எம். அஷ்ரப், கோறளைப் பற்று மேற்கு ஒட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment