ஒட்டமாவடி: முன்னாள் அனர்த்த நிவாரன சேவைகள் அமைச்சரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலியின் முயற்சியின் பயனாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கிராமத்துக்கு ஒரு வேளைத்திட்டம் செயற்திட்டத்தின் கீழ் 10 இலட்சம் ரூபாய் செலவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப் பற்று மேற்கு ஒட்டமாவடி பிரதேச சபைக்கு சொந்தமான ஒட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்திற்கு சுற்று மதில் வேலி அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 08-09-2014 நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.
கோறளைப் பற்று மேற்கு ஒட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட் தலைமையில் இடம்பெற்ற இவ் அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி கலந்து கொண்டார்.
இதன் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி மற்றும் அதிதிகளினால் அமீர் அலி விளையாட்டு மைதானத்திற்கு சுற்று மதில் வேலி அமைப்பதற்கான அடிக்கல் நடப்பட்டது.
இந்நிகழ்வில் கோறளைப் பற்று மேற்கு ஒட்டமாவடி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம். றுவைத் , மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.எம். அஷ்ரப், கோறளைப் பற்று மேற்கு ஒட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்களான அஸ்மி, அஹமட், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் செயலாளர் எம்.ரீ.எம். பாரீஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Published by

Leave a comment