காத்தான்குடி: காத்தான்குடி நகரில் மிக சிறப்பாக இயங்கிவரும் பிஸ்மி இஸ்லாமிய பாடசாலையின் 2014 வருடாந்த பரிசளிப்பு விழா அண்மையில் புதிய காத்தான்குடி கடற்கரை கடாபி பீச் கார்டனில் இடம்பெற்றது. பிஸ்மி இஸ்லாமிய பாடசாலையின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.நுஸ்ரி நளீமி தலைமையில் இடம்பெற்ற இவ் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக பொத்துவில் மாவட்ட நீதி மன்றத்தின் நீதவான் அஷ்ஷெய்க் ஐ. நௌபல் ரிஸ்வான் கலந்து கொண்டார்.
இதன் போது பல்வேறு போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவ ,மாணவிகளுக்கு பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதிகளினால் கிண்ணமும், சான்றிதழும் ,பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு பிரதம அதிதி உரையை பொத்துவில் மாவட்ட நீதி மன்றத்தின் நீதவான் அஷ்ஷெய்க் ஐ. நௌபல் ரிஸ்வான் நிகழ்த்தியதோடு கௌரவ அதிதி உரையை பிஸ்மி குழுமத்தின் தவிசாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி நிகழ்த்தினார்.
இதில் பிஸ்மி இஸ்லாமிய பாடசாலை மாணவ மாணவிகளின் ஆற்றல்களை வெளிக்கொணரும் கிறாஅத், ஆங்கிலப் பாடல், பேச்சு, பிஸ்மி செய்திகள் , உங்களில் யார் வெற்றியாளர் ?, கஸீதா ,பட்டிமன்றம் போன்ற பல்வேறு விதமான இஸ்லாமிய கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம்.பைரூஸ், பிஸ்மி இஸ்லாமிய மேம்பாட்டு கழகத்தின் தலைவர் டாக்டர் எஸ்.நுஸைர் , ஊர் பிரமுகர்கள் ,பெற்றோர்கள் ,பிஸ்மி குழுமத்தின் பணிப்பாளர்கள் உட்பட உறுப்பினர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
Published by

Leave a comment