காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட உலமாக்களுக்கான ஒரு நாள் செயலமர்வொன்று எதிர்வரும் 13.09.2014 சனிக்கிழமை அல் மனார் நிறுவனத்தில் இடம்பெறவுள்ளதாக அந்நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனி தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சமகாலத்தில் முஸ்லிம்களின் கடமைகளும், பொறுப்புகளும் எனும் தொனிப்பொருளில் இச்செயலமர்வு இடம்பெறவுள்ளது. சஊதி அரேபிய நாட்டின் ஜித்தா நகரின் காழி நீதிபதி கலாநிதி அஷ்ஷெய்க் முஹம்மது பின் சுலைமான் அல் மஸ்ஊத் அவர்களது தலைமையில் நாஸர் அல் காமிதி மற்றும் ஹிஸாம் ஆகியோர்களடங்கிய தூதுக்குழுவொன்று இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஓட்டமவாடி, வாழைச்சேனை, ஏறாவூர், காத்தான்குடி மற்றும் அண்மிய முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள 200 உலமாக்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதுடன் பகற்போசன ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அஷ்ஷெய்க் மும்தாஸ் மதனி குறிப்பிட்டார்.
Published by

Leave a comment