Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • பத்றிய்யா மாநாட்டில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவில் அங்கம் வகிக்கும் உலமாக்கள் கலந்து கொள்வதில்லையென தீர்மாணம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடியில் எதிர்வரும் 18, 19, ஆம் திகதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாட்டில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவில் அங்கம் வகிக்கும் எந்த உலமாக்களும் கலந்து கொள்வதில்லையென நேற்று 13-10-2014 திகதி திங்கட்கிழமை

  • நான்கு ஆண்டுகளுக்கு முன் மரணித்த ஹஜ் யாத்திரிகரின் உடல் முஸ்தலிபாவில் மீட்பு!

    மக்கா: நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஹஜ் கடமையில் ஈடுபட்ட ஒருவரது சிதைந்த உடல் மக்காவுக்கு அருகில் முஸ்தலிபா மலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பெய்த கடும் மழை காரணமாகவே இந்த உடல் வெளிப்பட்டுள்ளது. இதனை பார்த்த பணியாளர்கள் ரோந்து சென்றுகொண்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பு குறிப்பிட்டுள்ளது.

  • பக்தாத்திற்கு மிக அருகிலுள்ள அன்பார் மாகாணத்தைக் கைப்பற்றியது ஐ.எஸ்!

    – MJ பக்தாத்: இஸ்லாமியத் தேசப் போராளிகள் என அழைக்கப்படும் ஐ.எஸ். இயக்கத்தினர் ஈராக்கின் தலைநகர் பக்தாத்திற்கு மிக அருகில் இருப்பதாக ஈராக் சர்வதேச ஊடகவியலாளர்கள் தற்பொழுது தெரிவித்து வருகின்றனர். ஈராக்கின் அன்பார் எனும் மாகாணம், பக்தாத்திற்கு அருகிலமைந்துள்ள மாகாணமாகும்

  • அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பற்றி வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது

    – ACJU கொழும்பு: சில குறிப்பிட்ட இணையதளங்களில் வெளியான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பற்றிய தகவல் உண்மைக்கு புறம்பானதாகும். எந்தவொரு பொலிஸ் அதிகாரிகளோ பயங்கரவாத தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர்களோ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் காரியாலயத்தில் பலவந்தமாக நுழைந்து அங்கிருந்து அல்-குர்ஆன் பிரதிகளை எடுத்துச் செல்லவில்லை. இவ்வாறு வெளியான செய்தியை கண்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது விசனத்தையும் கவலையையும் தெரிவித்துக் கொள்கின்றது.

  • சிப்லி பாரூக்கீன் நிதி ஒதுக்கீட்டில் பாலர் பாடசாலைகளுக்கு உபகரணங்கள் அன்பளிப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்கீன் பன்முகப்படுத்தப்பட்ட மாகாண நிதி ஒதுக்கீட்டில் பாலர் பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது. புதிய காத்தான்குடி அப்றா பாலர் பாடசாலை ,புதிய காத்தான்குடி அன்வர் பாலர் பாடசாலை,புதிய காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் ஹெபி கிட்ஸ் பாலர் பாடசாலை என்பனவற்றுக்கு பாலர் பாடசாலைக்கு தேவையான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

  • கலாநிதி.எம்.ஜே.எம். ஜெபீனுக்கு அதிதிறமைமிக்க அறிஞர் கௌரவம்

    யாழ்ப்பாணம்: இலவசக் கல்வியின் தந்தை என போற்றப்படும் கலாநிதி. சீ.டபிள்யு.டபிள்யு. கன்னங்கர அவர்களின் 130வது ஜனன தின நினைவு விழா யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில், அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின தலைமையில் நடைபெற்றது.

  • ‘டெங்கு இல்லாத இலங்கை’ மாணவர்களுக்கான சித்திரப் போட்டியில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு மாகாண மட்டத்தில் முதலிடம்

    – ஹாசிப் யாஸீன் கல்முனை: பாடசாலை மாணவர்கள் மத்தியில் டெங்கு நோய் பற்றிய அறிவினை மேம்படுத்தும் நோக்குடன் ‘டெங்கு இல்லாத இலங்கை’ எனும் தொனிப்பொருளில் சுகாதார அமைச்சும் கல்வி அமைச்சும் இணைந்து நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளில் தரம் 6 தொடக்கம் தரம் 8 வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கிடையில் சித்திரப் போட்டியினை நடாத்தியது.

  • காத்தான்குடியில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 458 குடும்பங்களுக்கு வீடமைப்பு மானிய உதவி

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 458 குடும்பங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் 13-10-2014 இன்று திங்கட்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் வைத்து நிவாரன உதவித் தொகைகள் வழங்கி வைக்கப்பட்டன.

  • ஜனாதிபதி தலைமையில் ‘யாழ்தேவி’ புகையிரத சேவை யாழிற்கு வந்தது

    – பழுலுல்லாஹ் பர்ஹான் யாழ்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அழைப்பின் பேரில் மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வடபகுதிக்கு வருகைதந்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் பளையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவையினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

  • காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு புதிய பொது வைத்திய நிபுனர் (VP) நியமனம்

    – நமது நிருபர் காத்தான்குடி: காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக பொது வைத்திய நிபுனர் (VP) நியமனம் பெற்று தற்போது கடமையாற்றி வருகின்றார். கம்பஹா பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட Dr.P.K. சிசிர குமார என்ற பொது வைத்திய நிபுனரே கடமையினை பொறுப்பேற்றிருக்கின்றார்.

  • திருமணம் செய்வதற்கு ‘இஸ்லாமிய தேசம்’ சென்ற குமரிகள் மீண்டும் சொந்த நாடு திரும்புவதில் சிக்கல்!

    – AF-90 வியன்னா: ‘இஸ்லாமிய தேச’த்து போராளிகளின் மணப்பெண்களாக மாறவேண்டும் என்ற ஆசையில் சிரியா சென்ற இரண்டு ஒஸ்ரிய (Austria) குமரிகள் தற்போது வீட்டுக்கு திரும்பி வர விருப்பம் தெரிவித்துள்ளனர். ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்து போராளிகளின் மணப்பெண்களாக இருக்க உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுமிகள் சிரியா, துருக்கி செல்கிறார்கள்.

  • ‘இஸ்லாமிய நூதன சாலை’யின் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கு தேசிய மரபுரிமைகள் அமைச்சர் தலைமையிலான குழு துபாய் நாட்டுக்கு பயணம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பெரும் முயற்சியின் பயனாக காத்தான்குடியில் அமைக்கப்பட்டுவரும் இலங்கையின் முதலாவது இஸ்லாமிய

←Previous Page
1 … 642 643 644 645 646 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar