-
தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் சுன்னத்வல் ஜமாஅத் என்போர் யார்? எனும் தலைப்பில் விஷேட தர்பியா நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் சுன்னத்வல் ஜமாஅத் என்போர் யார்? எனும் தலைப்பில் விஷேட தர்பியா நிகழ்வு எதிர்வரும் 17-10-2014 நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு காத்தான்குடி ஜாமிஉல் அதர் ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெறவுள்ளது.
-
வேகமாகப் பரவும் எபோலா! மரணித்தவர்களின் எண்ணிக்கை 4447!!
– AF- 90 ஜெனிவா: எபோலா நோய்க்கு இதுவரை 4,447 பேர் பலியாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், வாரத்திற்கு பத்தாயிரம் பேர் எபோலா தொற்றுக்கு ஆளாகும் அபாயம் நிலவுவதாகவும் அது கவலைத் தெரிவித்துள்ளது.
-
குர்து இன பத்திரிக்கையாளரை சுட்டுக் கொன்றது ஐ.எஸ்
– AF- 90 பாக்தாத்: குர்து இன பத்திரிகையாளர் முஹனத் அகிடியை, ஐ.எஸ் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இந்த செயலுக்கு உலக அளவில் கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன. அக்டோபர் 13ம் தேதி அகிடியை ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர்.
-
ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய 13 சந்தேக நபர்கள் மலேசியாவில் கைது!
கோலாலம்பூர்: ‘இஸ்லாமிய அரசு ‘ குழுவுடன் தொடர்புகள் வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் 13 பேரை மலேசிய அதிகாரிகள் கைது செய்திருக்கிறார்கள். இது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் கைது செய்யப்பட்டவர்களில் மாணவர்கள் மற்றும் தொழிற்சாலைப் பணியாளர்கள் அடங்குகிறார்கள் என்று உள்ளூர் செய்தி ஒன்று கூறியது.
-
அமைச்சர் றிஷாதின் முயற்சியில் மன்னார் கச்சேரிக்கு நான்கு மாடிக் கட்டிடத் தொகுதி
– பூமுதீன் மன்னார்: அமைச்சர் றிஷாதின் அயராத முயற்சியின் மற்றுமோர் பெறுபேறாக வெற்றிடமாக இருந்த மன்னார் கச்சேரி கட்டிடத் தொகுதி 24 கோடி ரூபா செலவில் கட்டப்படுகின்றது. இக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று 2014.10.14 நடைபெற்றது.
-
சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டி மட்டக்களப்பு நகரில் விழிப்புணர்வு ஊர்வலம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: 15-10-2013 திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தையொட்டி மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையுடன் இணைந்து மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் மற்றும் மட்டக்களப்பு பெண்கள் லயன்ஸ் கழகம் என்பன ஏற்பாடு செய்த வெள்ளைப்பிரம்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்; 15-10-2014 இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு நகரில்; நடைபெற்றது.
-
பலஸ்தீனத்திற்கு பிரித்தானிய எம்.பிக்கள் ஆதரவாக வாக்களிப்பு
லண்டன்: பலஸ்தீன தேசத்தை அங்கீகரித்து பிரிட்டன் பாராளுமன்ற உறுப் பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். பிரிட்டன் பாராளுமன்ற கீழவையில் நேற்று முன்தினம் இடம் பெற்ற இந்த வாக்கெடுப்பில் அரைவாசிக்கும் குறைவான உறுப் பினர்களே பங்கேற்றிருந்தனர். இதில் 274-2 என்ற அடிப்படையில் இஸ்ரேலையொட்டி பலஸ்தீன தேசத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
-
தேசிய வாசிப்பு மாதம் – ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில்
– ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: நவீன ஊடகங்களின் வருகையின் பின் அருகிவருகின்ற வாசிப்புதிறனை கட்டி எழுப்பும் முகமாக நாடளாவிய ரீதியில் ஒக்டோபர் மாதம் ‘வாசிப்பு மாதமாக’ அரசினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது யாவரும் அறிந்ததே.
-
றியாத்தில் இரு அமெரிக்க உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி!
– MJ றியாத்: றியாத் நகரின் மன்னர் ஃபஹத் விளையாட்டரங்கிற்கு அண்மையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து, இரு அமெரிக்க பிரஜைகள் இனந்தெரியாத நபர் ஒருவரால் துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்காகியுள்ளனர். இவர்களுள் ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும், மற்றுமொருவர் காயங்களுடன் ரியாத் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ரியாத் பொலிஸார் தெரிவித்தனர்.
-
மருதமுனை அல்-ஹிக்மா கனிஷ்ட பாடசாலைக்கு மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்கும், கழிவறைத் தொகுதிக்கும் அடிக்கல் நடும் நிகழ்வு
– ஹாசிப் யாஸீன் மருதமுனை: திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் 52 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மருதமுனை அல்-ஹிக்மா கனிஷ்ட பாடசாலைக்கு மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்கும், கழிவறைத் தொகுதிக்கும் அடிக்கல் நடும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை இடம்பெற்றது.
-
சர்வதேச கல்வி நிறுவனத்தின் 2014 ஆம்ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா காத்தான்குடியில்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கொழும்பில் அமைந்துள்ள சங்கீதம்,பேச்சு,நாடகம் ஆகியவற்றிற்கான சர்வதேச கல்வி நிறுவனத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா 12-10-2014 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
-
‘அறிவுபூர்வமான அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டிய தீர்க்கமான தருணத்தில் நமது சமூகம் இருக்கின்றது’ – பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தீர்க்கமான அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டிய இரண்டு தேர்தல்களை நம்நாடு எதிர்நோக்கி இருக்கின்றவேளையில் நமது சமூகம் உணர்ச்சி பூர்வமாகவன்றி அறிவுபூர்வமான அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.