திருமணம் செய்வதற்கு ‘இஸ்லாமிய தேசம்’ சென்ற குமரிகள் மீண்டும் சொந்த நாடு திரும்புவதில் சிக்கல்!

isis– AF-90

வியன்னா: ‘இஸ்லாமிய தேச’த்து போராளிகளின் மணப்பெண்களாக மாறவேண்டும் என்ற ஆசையில் சிரியா சென்ற இரண்டு ஒஸ்ரிய (Austria) குமரிகள் தற்போது வீட்டுக்கு திரும்பி வர விருப்பம் தெரிவித்துள்ளனர். ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்து போராளிகளின் மணப்பெண்களாக இருக்க உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுமிகள் சிரியா, துருக்கி செல்கிறார்கள்.

அப்படி தான் ஒஸ்திரியாவைச் சேர்ந்த சபினா செலிமோவிக் (15), சம்ரா கெசினோவிக் (17) ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி துருக்கி சென்றனர். தங்களை யாரும் தேட வேண்டாம் என்றும், அல்லாஹ்வுக்காக சேவை செய்து மரணமிக்க விரும்புவதாகவும் அவர்கள் கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றனர்.

ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்த இந்த குமரிகளின் புகைப்படங்களை போராளிகள் போஸ்டர்களில் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சபினா மற்றும் சம்ரா தங்கள் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு வீட்டுக்கு திரும்பி வர விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

isis
செலிமோவிக் (15), சம்ரா கெசினோவிக் (17) ஆகியோர்

“ஆனால் ஐஎஸ் தீவிரவாதி அமைப்பில் இருந்து தப்பித்து வரும் கடினமான விஷயம்” என்று ஒஸ்திரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஒஸ்திரிய ஊடகங்களில் கூறியிருப்பதாவது,

“சபினா மற்றும் சம்ரா செசன்ய தீவிரவாதிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது கர்ப்பமாக இருக்கலாம். அவர்கள் தப்பித்து வந்தாலும் வெளிநாட்டு போரில் கலந்து கொள்ள சென்றவர்கள் நாடு திரும்ப ஒஸ்திரிய சட்டம் அனுமதிக்காது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியன்னாவில் வளர்ந்த சபினா, சம்ரா போன்று சுமார் 130 ஒஸ்திரியர்கள் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ளதாக ஒஸ்திரிய அரசு தெரிவிக்கிறது.

Published by

Leave a comment