நான்கு ஆண்டுகளுக்கு முன் மரணித்த ஹஜ் யாத்திரிகரின் உடல் முஸ்தலிபாவில் மீட்பு!

hajமக்கா: நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஹஜ் கடமையில் ஈடுபட்ட ஒருவரது சிதைந்த உடல் மக்காவுக்கு அருகில் முஸ்தலிபா மலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பெய்த கடும் மழை காரணமாகவே இந்த உடல் வெளிப்பட்டுள்ளது. இதனை பார்த்த பணியாளர்கள் ரோந்து சென்றுகொண்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த உடல் முழுமையாக சிதைந்த நிலையில் இருந்துள்ளது.

‘இந்த உடலை ஆய்வு செய்தபோது மணிக் கட்டுபட்டை ஒன்றை கண்டெடுத்தோம். இது அடையாளம் காணுவதற்காக ஹாஜிக ளுக்கு சாதாரணமாக வழங்கப்படுவதாகும்’ என்று மக்கா பாதுகாப்பு அதிகாரி ஒருவர் விபரித்துள்ளார். இந்த உடல் மன்னர் பைசல் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

haj
முஸ்தலிபாவில் ஹாஜிகள்

Published by

Leave a comment