கலாநிதி.எம்.ஜே.எம். ஜெபீனுக்கு அதிதிறமைமிக்க அறிஞர் கௌரவம்
யாழ்ப்பாணம்: இலவசக் கல்வியின் தந்தை என போற்றப்படும் கலாநிதி. சீ.டபிள்யு.டபிள்யு. கன்னங்கர அவர்களின் 130வது ஜனன தின நினைவு விழா யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில், அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது இலங்கையிலுள்ள மத்தி மகா வித்தியாலயங்களில் அதிதிறமைமிக்க அறிஞர்களுக்கான கௌரவம் இடம்பெற்றது. இவ்விருதுக்காக காத்தான்குடி மத்திய கல்லூரியில் கல்வி கற்று தற்போது தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சிரேஸ்ட விரிவுரையாளராக கடமையாற்றும் கலாநிதி. எம்.ஜே.எம். ஜெபீன் அவர்களை பாடசாலையினால் சிபாரிசு செய்யப்பட்டு இந்நிகழ்வின் போது கௌரவிக்கப்பட்டார்.
கலாநிதி. எம்.ஜே.எம். ஜெபீன்
மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரான கலாநிதி.எம்.ஜே.எம். ஜெபீன் அவர்களுக்கு இவ் மீயுயர் கௌரவம் கிடைத்ததையிட்டு மத்திய கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்திக்குழு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கிறது.
தகவல்: அப்துல் அஸீஸ் செயலாளர் பழைய மாணவர் சங்கம் மத்திய கல்லூரி
Leave a comment