பக்தாத்திற்கு மிக அருகிலுள்ள அன்பார் மாகாணத்தைக் கைப்பற்றியது ஐ.எஸ்!
– MJ
பக்தாத்: இஸ்லாமியத் தேசப் போராளிகள் என அழைக்கப்படும் ஐ.எஸ். இயக்கத்தினர் ஈராக்கின் தலைநகர் பக்தாத்திற்கு மிக அருகில் இருப்பதாக ஈராக் சர்வதேச ஊடகவியலாளர்கள் தற்பொழுது தெரிவித்து வருகின்றனர். ஈராக்கின் அன்பார் எனும் மாகாணம், பக்தாத்திற்கு அருகிலமைந்துள்ள மாகாணமாகும்
இங்கு ரமாதி எனும் நகரையும் கைப்பற்றியுள்ளனர். ஐ.எஸ். மற்றும் ஈராக் அரச படைக்குமிடையில் பலத்த சண்டைகள் இங்கு இடம்பெற்றுவருகின்றன. இச்சண்டையில் இருதரப்பிலும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
அன்பார் மாநிலத்தில் அமைந்துள்ள ஹிட் எனும் மற்றுமொரு நகரிலும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. பதட்ட சூழ்நிலையால் அங்குள்ள 180,000 பொதுமக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர்.
பக்தாத்தை நெருங்கியுள்ள ஐ.எஸ். போராளிகளை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக ஈராக் அறிவித்துள்ளது.
Leave a comment