லண்டன்: பலஸ்தீன தேசத்தை அங்கீகரித்து பிரிட்டன் பாராளுமன்ற உறுப் பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். பிரிட்டன் பாராளுமன்ற கீழவையில் நேற்று முன்தினம் இடம் பெற்ற இந்த வாக்கெடுப்பில் அரைவாசிக்கும் குறைவான உறுப் பினர்களே பங்கேற்றிருந்தனர். இதில் 274-2 என்ற அடிப்படையில் இஸ்ரேலையொட்டி பலஸ்தீன தேசத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
பிரதமர் டேவிட் கெமரூன் மற்றும் அமைச்சர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. இந்த வாக்கெடுப்பில் எந்த முடிவு கிடைத்தாலும் நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கெமரூன் முன்கூட்டியே அறிவித்திருந்தார்.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்திற்கு ஆளுங்கட்சியின் ஒருசில உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
முன்னதாக ஐரோப்பாவின் முக்கிய நாடுகளில் ஒன்றான சுவீடன் அண்மையில் பலஸ்தீன தேசத்திற்கு அங்கீகாரம் அளித்தது. எனி னும் இதனை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நிராகரித்தன. பலஸ் தீன சுதந்திரம், பேச்சுவார்த்தை ஊடாகவே அங்கீகரிக்கப்பட வேண் டும் என்று இந்த நாடுகள் கூறி வருகின்றன.
பலஸ்தீன தேசத்தை உலகில் 134 நாடுகள் அங்கீகரித்திருப்பதாக பலஸ்தீன அதிகார சபை கணித்துள்ளது. இதில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளும் பலஸ்தீன சுதந்திரத்தை ஏற்கின்றன.
கடந்த 2012 பலஸ்தீனத்திற்கு ஐ.நா. சபையால் அங்கத்துவமற்ற பார்வையாளர் அந்தஸ்து வழங்கப்பட்டது. இதற்காக பொதுச்சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பங்கேற்காத 41 நாடுகளில் பிரிட்டனும் ஒன்றாகும்.
Published by
![palestine_flag[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/03/palestine_flag1.jpg?w=150&h=94)
Leave a comment