மட்டக்களப்பு: 15-10-2013 திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தையொட்டி மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையுடன் இணைந்து மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் மற்றும் மட்டக்களப்பு பெண்கள் லயன்ஸ் கழகம் என்பன ஏற்பாடு செய்த வெள்ளைப்பிரம்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்; 15-10-2014 இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு நகரில்; நடைபெற்றது.
மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் தலைவர் எம்.மகேந்திரராஜா தலைமையில் இடம்பெற்ற இவ் விழிப்புணர்வு ஊர்வலம் மட்டக்களப்பு காந்தி சதுக்கத்திலிருந்து ஆரம்பமாகி மட்டு-நகர் மணிக்கூட்டுக் கோபுரம் வழியாக மட்டக்களப்பு அரசடி தேவநாயகம் மண்டபத்தை சென்றடைந்தது.
இதன் போது ஊர்வலத்தில் கலந்து கொண்ட விஷேட தேவையுள்ள மாணவர்கள்,பாடசாலை மாணவர்கள் ,பொது மக்கள் வெள்ளைப் பிரம்பு தினத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வெள்ளைப் பிரம்பு எம் நடைக்கு உறுதுணை,ஆதரவுக்கரங்கள் எமக்கு ஆதாரத்தூண்கள்,வெள்ளைப் பிரம்பே விழியிழந்தோருக்கு வழிகாட்டி,பார்வையிழந்தோரும் ஆசான்கள் ,அலுவலர்கள்,வெள்ளைப் பிரம்பை அசட்டை செய்யாதீர்,அனுதாபமல்ல ஆதரவே வேண்டும், ஆதவுக் கரங்களே தங்களுக்கு நன்றி,பிறெய்ஸ் என்பது எமது எழுத்து எனும் பல்வேறு பதாதைகளுடன் பயணித்தனர்.
இவ் ஊர்வலத்தில் மட்டக்களப்பு லயன்ஸ் கழகப் பிரதிநிதி ஏ. செல்வேந்திரன், மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் தலைவர் கலீல்;, மட்டக்களப்பு லயன்ஸ் கழக பிரதிநிதிகள், ஆண்.பெண் விழிப்புலனற்றோர் என பலரும் கலந்து கொண்டார்.
சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டி கடந்த 1992 முதல் இவ்வாறான விழிப்புணர்வு ஊர்வலங்களை மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment