றியாத்தில் இரு அமெரிக்க உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி!

Riyadh, Saudi Arabia– MJ

றியாத்: றியாத் நகரின் மன்னர் ஃபஹத் விளையாட்டரங்கிற்கு அண்மையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து, இரு அமெரிக்க பிரஜைகள் இனந்தெரியாத நபர் ஒருவரால் துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்காகியுள்ளனர். இவர்களுள் ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும், மற்றுமொருவர் காயங்களுடன் ரியாத் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ரியாத் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று செவ்வாய்க்கிழமை பி.ப. இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

riyadh (2)

இரு அமெரிக்க பிரஜைகளும் அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்ததாரர்கள் என வாஷிங்டன் அறிவித்துள்ளது. ‘வினெல் அரேபியா’ பாதுகாப்புக் காரியாலயத்தில் குறித்த இருவரும் பணியாற்றிவருபவர்கள் என்றும், கொல்லப்பட்டவர் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி எனவும் வாஷிங்டன் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிப் பிரயோகம் செய்த நபரை, துப்பாக்கிப் பிரயோகம் செய்து தாங்கள் கைதுசெய்துள்ளதாக ரியாத் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Riyadh, Saudi Arabia

Published by

Leave a comment