ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய 13 சந்தேக நபர்கள் மலேசியாவில் கைது!

malaysiaகோலாலம்பூர்: ‘இஸ்லாமிய அரசு ‘ குழுவுடன் தொடர்புகள் வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் 13 பேரை மலேசிய அதிகாரிகள் கைது செய்திருக்கிறார்கள். இது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் கைது செய்யப்பட்டவர்களில் மாணவர்கள் மற்றும் தொழிற்சாலைப் பணியாளர்கள் அடங்குகிறார்கள் என்று உள்ளூர் செய்தி ஒன்று கூறியது.

இந்த ஆண்டு ஏப்ரலிலிருந்து தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 36 பேரைக் கைது செய்திருப்பதாக மலேசியா கூறுகிறது. ஏற்கனவே குறைந்தது வேறு 30 பேர் சிரியாவிலும் ஈராக்கிலும் இருப்பதாகத் தாங்கள் நம்புவதாக அதிகாரிகள் கூறினர்.

malaysia

Published by

Leave a comment