தேசிய வாசிப்பு மாதம் – ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில்

ERAVUR ALIGAR– ஏறாவூர் அபூ பயாஸ்

ஏறாவூர்: நவீன ஊடகங்களின் வருகையின் பின் அருகிவருகின்ற வாசிப்புதிறனை கட்டி எழுப்பும் முகமாக நாடளாவிய ரீதியில் ஒக்டோபர் மாதம் ‘வாசிப்பு மாதமாக’ அரசினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது யாவரும் அறிந்ததே.

இதனை பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் நடைமுறைப்படுத்துமாறு கல்வி அமைச்சினால் அனுப்பப்பட்ட சுற்று நிருபத்துக்கு அமைவாக ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் இம்மாதத்தில் வாசிப்பை ஊக்குவிக்கும் பல்வேறு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ERAVUR ALIGAR

வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நூலக வார நிகழ்வுகளின் அங்குரார்பன வைபவம் 13-10-2014 திங்களன்று கல்லூரியின் அதிபர் அல்ஹாஜ் ஏ.எம்.தௌபீக் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நடைமுறைப்படுத்தவுள்ள இந் நூலக வார நிகழ்வுகளாக முதலாம் நாள் கொடியேற்றத்துடன், பதாதைகள் தொங்கவிடலும், இரெண்டாம் நாள் கொடி விற்பனையும், மூன்றாம் நாள் சிரமதான நிகழ்வும், நான்காம் நாள் போட்டி நிகழ்சிகளும் (பேச்சு, கவிதை, கட்டுரை), ஐந்தாம் நாள் பரிசளிப்பு விழாவும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார்.

ALIGAR ERAVUR

வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி கல்லூரியின் தமிழ் பாடத்துறை ஆசிரியர் ஜனாப் கே .நௌஷாத் அவர்கள் மாணவர்கள் முன் உரையாற்றினார்.அத்தோடு ‘புத்தகம் பூக்கும் வித்தகம்’ என்ற மகுட வாசகம் பொறிக்கப்பட்ட பதாகையும் கல்லூரி அதிபரினால் வெளியிடப்பட்டது.

ERAVUR

Published by

Leave a comment