Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மண்முனை பற்று பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்வின் எழுச்சி திவிநெகும பயனாளிகள் 600 பேருக்கு மானிய உதவி 2500 ரூபாய் வழங்கி வைப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ‘செழிப்பான இல்லம்’ எனும் தொனிப்பொருளில் வாழ்வின் எழுச்சி திவிநெகும உதவிபெறும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த வறிய குடும்பங்களுக்கு வீடுகளை திருத்துவதற்கான வீட்டு மானிய உதவிகளை வழங்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

  • “இஸ்லாத்தில் நிலைத்திருக்க இஸ்லாம் கூறும் போதனைகள்” என்ற தலைப்பில் கட்டாரில் வாராந்த ஈமானிய அமர்வு

    – கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) الســـــــــــلام عليــــكم ورحمــــــة الله وبركاتــــــــــه ،،،،، அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு டோஹா: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி 11-12-2014 வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.

  • சவூதி அரேபிய அரசின் நிதி உதவியுடன் பூநொச்சிமுனையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் 40 வீடுகளை கொண்ட வீட்டுத் தொகுதி

    – பழுலுல்லாஹ் பர்ஹான் பூநொச்சிமுனை: மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடு வசதியில்லாத வறிய குடும்பங்களுக்கு சவூதி அரேபிய நாட்டு அரசின் நிதி உதவியுடன் சிறி லங்கா ஹிறா பௌன்டேஷன் நிறுவனத்தினால் மட்டக்களப்பு பூநொச்சிமுனை பிரதேசத்தில் 40 வீடுகளை கொண்ட வீட்டுத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுவருகின்றது. இவ் வீட்டுத் தொகுதியியை சிறிலங்கா ஹிறா பௌன்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 11-12-2014 இன்று வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

  • மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டு உபகரணங்கள்,தளபாடங்கள் கையளிப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் கிழக்கின் உதயம் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் 11 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மண்முனை வடக்கு மட்டக்களப்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விளையாட்டு கழகங்கள் , சமூக சேவை நிறுவனங்கள் ,பள்ளிவாயல்கள்,மாதர் அமைப்புக்கள், பாலர் பாடசாலைகள் உட்பட 14 அமைப்புக்களுக்கு தேவையான உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

  • இஸ்ரேல் படையினர் தாக்கி பலஸ்தீன அமைச்சர் பலி

    டெல்அவிவ்: ஆக்கிரமிப்பு மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் படையினருடன் ஏற்பட்ட மோதலை அடுத்து பலஸ்தீன அமைச்சரான செயித் அபு அயின் கொல்லப்பட்டுள்ளார். அதிக கண்ணீர்ப்புகை காரணமாக மூச்சுத் திணறிய நிலையிலேயே நேற்று அவர் கொல்லப்பட்டுள்ளார். வடக்கு ரமல்லாவில் துர்முஸய்யா கிராமத்திற்கு அருகில் தடுப்புச் சுவருக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போதே இஸ்ரேல் படையினருடன் மோதல் ஏற்பட்டுள்ளது.

  • அநுராதபுரத்தில் ஐ.ம.சு.மு.வின் முதலாவது பிரசாரக் கூட்டம் இன்று

    கொழும்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கலந்து கொள்ளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது. இன்று காலை அநுராதபுரத்தில் ஸ்ரீ மா போதியைத் தரிசித்து மகாநாயக்க தேரர்களின் ஆசிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ள ஜனாதிபதி, அதனையடுத்து அநுராதபுர நகரில் நடைபெறும் முதலாவது தேர்தல் பிரசாரக்கூட்டத்திற்குத் தலைமை வகிப்பார்.

  • “மைத்திரி வென்றால் 100 நாட்களில் தகவலறியும் சட்டம்”: ரனில்

    கொழும்பு: ஜனாதிபதி தேர்தலுக்கான, எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றால், அவர் வென்ற நூறு நாட்களுக்குள் தகவல் அறியும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமென்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரனில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.நேற்று கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.

  • தனியார் உயர்கல்வி நிறுவனங்களை மாணவர்கள் தமது இறுதித் தெரிவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும் – பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ‘இலங்கையில் வளர்ச்சியடைந்து வரும் தனியார் உயர்கல்வித் துறையானது மாணவர்களுக்கு பல வாய்ப்புக்களைக் கொடுக்கிறது. இருந்தாலும் உயர் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்கள் தமது இறுதித் தெரிவாகவே தனியார் உயர் கல்விநிறுவனங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்’ என பீகாஸ் கெம்பஸ் உயர் கல்வி நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

  • சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வு

    அப்துல் அஸீஸ் / பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி, 10.12.2014 இன்று மட்டக்களப்பு கிறீன்காடன் ஹோட்டலில் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் ‘சுழலும் சொல் அரங்கு’ எனும் தலைப்பிலான நிகழ்வு நடைபெற்றது.

  • நச்சுக் கருத்துக்களை விடுக்கின்ற சக்திகளிடமிருந்து நாம் அவதானமாக இருக்க வேண்டும் – பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா

    எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: ‘முஸ்லிம்கள் இந்த நாட்டு பிரஜைகள் இல்லையாம்’ இவ்வாறு சிறுபாண்மையினருக்கெதிரான நச்சுக் கருத்துக்களை விடுக்கின்ற சக்திகளிடமிருந்து நாம் அவதானமாக இருக்க வேண்டும் இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

  • கிழக்கிழங்கை அறபுக்கல்லூரியின் புதிய மாடிக்கட்டடத்திற்கான அடிக்கல் நடு விழா

    Abdul Jaleel அட்டாளைச்சேனை: கிழக்குமாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பு நிர்மாணம், கிராமிய மின்சாரம் மற்றறும் நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அட்டாளைச்சேனை  கிழக்கிழங்கை அறபுக் கல்லூரிக்கு மூன்று மாடிக்கட்டிடத்திற்கு  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

  • அமெரிக்கா திட்டமிட்டு முஸ்லிம் சமூகத்தையும், முஸ்லிம்களையும் அழித்துக்கொண்டிருக்கின்றது – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

    ஒலிப்பதிவு- பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: அமெரிக்கா திட்டமிட்டு முஸ்லிம் சமூகத்தையும், முஸ்லிம்களையும் அழித்துக்கொண்டிருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் 10-12-2014 இன்று புதன்கிழமை காத்தான்குடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார்.

←Previous Page
1 … 598 599 600 601 602 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar