Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காத்தான்குடி பிரதேசத்தில் திவிநெகும பயனாளிகள் 500 பேருக்கு வீடு திருத்துவதற்கான முதற்கட்ட மானிய உதவி வழங்கி வைப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ‘செழிப்பான இல்லம் ‘எனும் தொனிப்பொருளில் திவிநெகும உதவிபெறும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த வறிய குடும்பங்களுக்கு வீடுகளை திருத்துவதற்கான வீட்டு மானிய உதவிகளை வழங்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

  • மைத்திரியின் ஆதரவாளர்கள் மீது கட்டுகஸ்தோட்டையில் தாக்குதல்

    கட்டுகஸ்தோட்டை: பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் நேற்றைய கண்டிக் கூட்டத்துக்கு சென்று திரும்பியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கண்டி கட்டுகஸ்தோட்டை பகுதியில் வைத்து இந்தத் தாக்குதல் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் கட்டுகஸ்தோட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  • ‘பெட்ரோல் விலை வீழ்ச்சி , இஸ்லாமுக்கு எதிரான சதி’

    தெஹ்ரான்: பெட்ரோலியப் பொருட்களில் பெரிய அளவிலான விலை வீழ்ச்சி மத்திய கிழக்குப் பகுதிக்கும், இஸ்லாமிய உலகுக்கும் எதிரான அரசியல் சதி என்று ஈரானிய அதிபர் ஹசான் ரொஹானி குற்றம்சாட்டியுள்ளார்.கச்சா எண்ணை விலை குறைவால், இரானின் பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், இது குறித்து ரொஹானி தெரிவித்த மிகவும் கடுமையான கருத்துக்கள் இவை.

  • ஹிரு­ணிகா வீட்டின் மீது கழிவு எண்ணெய் தாக்குதல்!

    கொழும்பு: ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் மேல் மாகாண சபை உறுப்­பி­னரும் மறைந்த முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினருமான பாரத லக்ஷ்மன் பிரே­மச்­சந்­திரவின் புதல்­வி­யு­மான ஹிரு­ணிகா பிரே­மச்­சந்­திரவின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்களால், கழிவு எண்ணெய் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு கட் அவுட்டுகளும் கிழிக்கப்பட்டுள்ளன.

  • ‘மஹிந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் அனைவரும் பெயரளவிலேயே அமைச்சர்களாக உள்ளனர்’

    கொழும்பு: ஜனாதிபதி மஹிந்தவின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் அனைவரும் பெயருக்காக அமைச்சர்களாக உள்ளனர் என்று பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் அமைச்சுக்களின் செயலாளர்கள்,  அமைச்சர்களை கேட்டு எதனையும் செய்வதில்லை. அவர்கள், அலரிமாளிகையில் இருந்து வரும் உத்தரவுகளுக்கு இணங்கவே செயற்படுகின்றனர் என்று சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-பாதுகாப்புச் செயலர் சந்திப்பு: ஹக்கீமின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது!

    கொழும்பு: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்டது. ரவூப் ஹக்கீமிற்கும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரிடையே முக்கிய சந்திப்பொன்று நேற்று பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

  • காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் திவிநெகும பயனாளிகள் 500 பேருக்கு வீடு திருத்துவதற்கான முதற்கட்ட மானிய உதவி வழங்கி வைப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ‘செழிப்பான இல்லம் ‘எனும் தொனிப்பொருளில் திவிநெகும உதவிபெறும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த வறிய குடும்பங்களுக்கு வீடுகளை திருத்துவதற்கான வீட்டு மானிய உதவிகளை வழங்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய காத்தான்குடி பிரதேசத்தில் 1 கோடி 3 இலட்சம் ரூபாய் நிதியில் ஒரு குடும்பத்திற்கு 2500 ரூபாய் வீதம் சுமார் 5300 திவிநெகும பயனாளிகளுக்கும் வீட்டு மானிய உதவி வழங்கும் திட்டத்தில் சுமார் 500 பேருக்கு வீட்டு மானிய உதவி…

  • சி.ஐ.ஏ. சித்திரவதை அறிக்கை வெளியாவதையொட்டி உலகெங்கும் அமெ. வளாகங்களின் பாதுகாப்பு அதிகரிப்பு!!

    வாஷிங்டன்: அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. வின் கொடூரமான புலன்விசாரணை செயற்பாடுகள் குறித்த அறிக்கை வெளியாகவுள்ள நிலையில் உலகெங்கும் உள்ள அமெரிக்க வளாகங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாரிய அச்சுறுத்தல் இருப்பதால் தூதரகங்கள் மற்றும் ஏனைய தலங்களில் முன்னெச்சரிக்கை செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். சி.ஐ.ஏ. தொடர்பான 480 பக்கங்கள் கொண்ட செனட் சபை அறிக்கை அமெரிக்க நேரப்படி நேற்று வெளியாகவிருந்தது.

  • பாதுகாப்பு செயலருடன் முஸ்லிம் காங்கிரஸ் பேச்சு

    கொழும்பு: கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தினர். பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையொன்றின் போது சகல பிரச்சினைகளுக்கும் உடனடியாக தீர்வு முன்வைக்கப்படுமென உறுதியளிக்கப்பட்டது.

  • “அமெரிக்க புலனாய்வு அமைப்பான, சிஐஏ கைகொண்ட சர்ச்சைக்குரிய விசாரணை முறைகளில் தோல்விகளே கிடைத்தன”

    வாஷிங்டன்: அமெரிக்க புலனாய்வு அமைப்பான, சிஐஏ கைகொண்ட சர்ச்சைக்குரிய விசாரணை முறைகளை, கொடுமையானது என்றும் திறனற்றது என்றும் வர்ணித்துள்ள அமெரிக்க செனட் அவை அறிக்கை, இம்முறைகளைக் கையாண்டதற்காக சி ஐ ஏ வை கடுமையாக விமர்சித்துள்ளது. சில நேரங்களில் தடுத்து வைக்கப்பட்டோர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை முறையானது சித்ரவதையை ஒத்திருந்ததாக செனட் அவையின் புலனாய்வுக் குழுவின் தலைவர் டையான் பெயின்ஸ்டைன் தெரிவித்துள்ளார்.

  • இளைஞர்களுக்கு நல் வழிகாட்டுதல்களை வழங்குபவர்களாக இளைஞர் சேவைகள் அதிகாரிகள் திகழ்கின்றனர் – இளைஞர் கழக சம்மேளனத்தின் உப தலைவர் பாரிஸ்

    பழுலுல்லாஹ் பர்ஹான் கிரான்: இளைஞர்களுக்கு நல் வழிகாட்டுதல்களை வழங்குபவர்களாக இளைஞர் சேவைகள் அதிகாரிகள் திகழ்கின்றனர் என மட்டக்களப்பு  மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் உப தலைவர் எம்.ரீ.எம். பாரிஸ் தெரிவித்தார்.

  • எயிட்ஸ் நோய் ஒழிப்பு வேலைத்திட்டம் மட்டு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பூர்த்தி

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என். நைறூஸின் வழிகாட்டலில் எயிட்ஸ் நோய் ஒழிப்பு வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.  

←Previous Page
1 … 599 600 601 602 603 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar