மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டு உபகரணங்கள்,தளபாடங்கள் கையளிப்பு

hiz (2)– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் கிழக்கின் உதயம் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் 11 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மண்முனை வடக்கு மட்டக்களப்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விளையாட்டு கழகங்கள் , சமூக சேவை நிறுவனங்கள் ,பள்ளிவாயல்கள்,மாதர் அமைப்புக்கள், பாலர் பாடசாலைகள் உட்பட 14 அமைப்புக்களுக்கு தேவையான உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

அன்பளிப்பு செய்யப்பட்ட 11 இலட்சம் ரூபாய் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் ,தளபாடங்கள்,ஒலிபெருக்கி சாதனங்கள் உட்பட மற்றைய உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு 11-12-2014 இன்று வியாழக்கிழமை மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலத்தில் மஞ்சந்தொடுவாய் அபிவிருத்திக்குழுவின் தலைவர் எம்.பாதுஸா தலைமையில் இடம்பெற்றது.

hiz (2)

இதன் போது விளையாட்டு கழகங்கள் , சமூக சேவை நிறுவனங்கள் ,பள்ளிவாயல்கள்,மாதர் அமைப்புக்கள், பாலர் பாடசாலைகள் ஆகியவற்றுக்கு தேவையான உபகரணங்கள்; பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

hiz

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு மட்டக்களப்பு பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் கே.யோகராஜா, பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின், ‘லங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் இணைப்பாளர் எம்.ரீ.எம்.கரீம்,மஞ்சந்தொடுவாய் அபிவிருத்திக்குழுவின் செயலாளர் எம்.றவூப், மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச மக்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

Published by

Leave a comment