சவூதி அரேபிய அரசின் நிதி உதவியுடன் பூநொச்சிமுனையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் 40 வீடுகளை கொண்ட வீட்டுத் தொகுதி

poonochimunai– பழுலுல்லாஹ் பர்ஹான்

பூநொச்சிமுனை: மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடு வசதியில்லாத வறிய குடும்பங்களுக்கு சவூதி அரேபிய நாட்டு அரசின் நிதி உதவியுடன் சிறி லங்கா ஹிறா பௌன்டேஷன் நிறுவனத்தினால் மட்டக்களப்பு பூநொச்சிமுனை பிரதேசத்தில் 40 வீடுகளை கொண்ட வீட்டுத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுவருகின்றது. இவ் வீட்டுத் தொகுதியியை சிறிலங்கா ஹிறா பௌன்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 11-12-2014 இன்று வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

அங்கு விஜயம் செய்த பிரதியிமைச்சர் குறித்த வீட்டுத்திட்டத்தின் நிர்மாண வேலைகளை பார்வையிட்டதோடு வீட்டு நிர்மாண பணியாளர்களிடம் குறை நிறைகளையும் கேட்டறிந்து தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.

இவ் விஜயத்தில் பிரதயிமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மக்கள் தொர்பாடல் அதிகாரி முஹம்மட் றுஸ்வினும் கலந்து கொண்டார்.

குறித்த இவ் வீட்டு திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஒரு வீட்டுக்கு தலா 8 எட்டு இலட்சம் ரூபாய் செலவுடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

poonochimunai

hizbullah

poonochimunai house

Published by

Leave a comment