சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வு

unnamed1அப்துல் அஸீஸ் / பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி, 10.12.2014 இன்று மட்டக்களப்பு கிறீன்காடன் ஹோட்டலில் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் ‘சுழலும் சொல் அரங்கு’ எனும் தலைப்பிலான நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது பேராசிரியர் சித்திரலேகா மௌனகுரு, கலாநிதி.ரி. ஜெயசிங்கம், பன்நூல் ஆசிரியர். எம்.எம்.எம். மௌருப்கரீம், அரச நிருவாக உத்தியோகத்தர், எழுத்தாளர் கே.எம்.எம். செரீப், சட்டத்தரணி அருள்வாணி சுதர்சன், பல்சமய ஒன்றியத்தின் பிரதிநிதி. எஸ். விஸ்ணுமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.

இணைப்பாளர் அஸீஸ் கருத்துத் தெரிவிக்கும் போது, இன்றைய சர்வதேச மனித உரிமைகள் தினத்தின் கருப்பொருள் ‘மனித உரிமைகள் 365’ என்பதாகும். ஒரு மனிதன் பிறந்தது முதல் அவன் உயிர் வாழும் காலம் வரை உரிமையுடனேயே வாழ்கிறான். அதனை எவரும் பறிக்கவோ அல்லது வழங்காதிருக்கவோ முடியாது. அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் போன்ற ஒரு பொதுவான சாதனம் ஒரு பரந்த வீச்சிலான மனித உரிமைகளை உள்ளடக்குகிறது. அத்துடன் ஒரு பரந்த அர்த்தத்தில் காணப்படுகிறது.

1948ஆம் ஆண்டு மார்கழி 10ம் திகதி அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் தாபனம் கொண்டு வந்தது. இதில் 30 உறுப்புரைகள் உள்ளடக்கப்டடுள்ளது. மனித உரிமைகள் பற்றி பேசுகையில் மீறல்கள் மற்றும் பலியானோர் குறித்த சிந்தனைகள் ஏற்படும்.  அது மேலும் அதிகரி;த்த வகையில் சட்ட நியமங்களுடனும் சம்பந்தமுறுகிறது. மனித உரிமைகள் என்பது மனிதராகவிருப்பதன் காரணத்தினால் எழுபவை என்பதாகும்.  அவை ஒவ்வொரு நபரினதும் உள்ளார்ந்த கௌரவம் குறி;த்த எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும்.  

சில நாடுகளில் இனத்துவ சிறுபான்மையினர் பிரிவினை அல்லது சுதந்திரத்திற்கான உரிமை உள்ளிட்ட சுயநிர்ணய உரிமை தனக்கு உண்டெனக் கூறுகி;ன்றனர். பாகுபாடின்மை சமத்துவ எண்ணக்கருவிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகும்.  சர்வதேச உடன்படிக்கைகள் இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் அல்லது வேறு அபிப்பிராயம் தேசிய அல்லது சமூக மூலம் சொத்து அல்லது பிறப்பு ஏனைய அந்தஸ்தின் அடிப்படையில் எவருக்கும் எதிரான பாகுபாடு காட்டப்படக்கூடாதெனத் தெரிவிக்கிறது. மேற்கண்டவாறு அஸீஸ் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள். சமுதாய சீர்திருத்த குழுவினர், சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றிய இளைஞர்கள், ஆணைக்குழுவின் சிவில் குழு பிரதிநிதிகள் பங்குபற்றுனர்களாக கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment