-
“தேர்தல் நெருங்க இலங்கை முஸ்லிம்களுக்கு சாதகமான முடிவுகள்”
திருகோணமலை: இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கும் இவ்வேளையில், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் அரசாங்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளதை காண முடிகின்றது. குறிப்பாக காணி , வாழ்வாதாரம் மற்றும் மத வழிபாட்டு உரிமை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் சாதகமான முடிவுகள் சில தமக்கு கிடைத்துள்ளதாக முஸ்லிம்கள் தெரிவிக்கின்றார்கள்.
-
வெள்ளிக்கிழமை ஏறாவூரில் வினியோகிக்கப்பட்ட துன்டுப்பிரசுரம் தொடர்பில் அரசியல் தலைமைகளின் நடவடிக்கைகள் எவ்வாறு அமையப்போகின்றது!
எம்.எஸ்.எம்.ஸப்றாஸ் ஏறாவூர்: வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் ஏறாவூரின் அனைத்து ஜும்ஆ பள்ளிவாயல்களிலும் வினியோகிக்கப்பட்ட காணிப்பிரச்சினை தொடர்பான துண்டுப்பிரசுரம் தொடர்பில் சமகால அரசியல் நிலமைகளில் அரசியல் தலைமைத்துவங்கள் இதற்கான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க எப்பேற்பட்ட முன்னெடுப்புக்களை முன்னெடுக்கப்போகின்றார்கள் என்பதனை ஏறாவூர் முஸ்லிம் சமூகம் உன்னிப்போடு அவதானித்துக் கொண்டிருக்கின்றது.
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் NTJ யின் நிலைப்பாடு என்ன?
காத்தான்குடி: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் NTJ யின் நிலைப்பாடு என்ன? என்ற தலைப்பில் 12.12.2014 அன்று தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தில் நடைபெற்ற விஷேட சொற்பொழிவு (சில மாற்றங்களுடன்) உரை: மௌலவி ஸஹ்றான் (மஸ்ஊதி) தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உப தலைவர், தொகுப்பு: மௌலவி M.C.M ஸைனீ (உமரீ) தேசிய தவ்ஹீத் ஜமாஅத் செயலாளர், விஷேட சொற்பொழிவு பின்வருமாரு ஆரம்பிக்கப்படுகின்றது.
-
வவுனியா விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வவுனியா: வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு கட்டமாக வவுனியா விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (12.12.2014) இடம்பெற்றது.
-
வாக்குச் சீட்டு அச்சிடும் பணியில் பாதுகாப்பில் சந்தேகம்!!
கொழும்பு: வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகளின் போது பொலிஸாரின் பாதுகாப்பு மட்டும் பெற்றுக்கொள்ள எடுத்த் தீர்மானம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அரச அச்சகக் கூட்டுத்தாபன உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகளின் போது கடந்த காலங்களில் பொலிஸாருடன் இணைந்து அரச அச்சகக் கூட்டுத்தாபன பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
-
திறப்பு விழா இன்று
– ஹாசிப் யாஸீன் கல்முனை: பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் முயற்சியினால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கல்முனைக்குடி சாஹிபு வீதியில் நிர்மாணிக்கப்பட்ட பல்தேவைக் கட்டிடம் மற்றும் கல்முனைக்குடி முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் முன்பாக நிர்மாணிக்கப்பட்ட கடைத் தொகுதிகள் என்பன திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (13) பி.ப 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
-
இலங்கை முஸ்லிம்கள் ‘இதனை’ச் செய்திருக்க வேண்டும்: ஆனால் செய்யவில்லை…
– முஸ்லிமீன் கொழும்பு: தேர்தல் காலம் வந்ததும் அரசியல்வாதிககளை இறைவன் அந்தஸ்த்தில் (நஊதுபில்லாஹ்) வைத்துபார்ப்பது எமது முஸ்லிம்களிடத்தில் இருந்துவரும் அறியாமைகளில் ஒன்றாகும்.இவ்வளவு ஓர் நவீனமான சமூக வலைத்தள யுகத்திலும் இலங்கையின் தற்போதய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை இன்னும் எதிர்பார்த்திருப்பது முஸ்லிம்களின் அறியாமைக்கு எடுத்துக்காட்டாக அமைகின்றது.
-
“ஜனாதிபதி மஹிந்தவினால்தான் முஸ்லிம்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த முடியும்”- அஸ்வர்
அநுராதபுரம்: ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவினால்தான் முஸ்லிம்களின் எதிர்கால பாதுகாப்பும், நலன்களும் தொடர்ந்தும் உத்தரவாதப்படுத்தப்படும். இதனை முஸ்லிம்கள் நன்கு உணர்ந்து உள்ளனர். மூன்றாவது முறையும் அவரை ஜனாதிபதியாக்க முஸ்லிம்கள் என்றோ முடிவெடுத்து விட்டார்கள் என்று ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார, தகவல் ஊடக சிரேஷ்ட ஆலோசகரான ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்துள்ளார்.
-
ஹப்புத்தளை பிரதேசத்தில் நேற்றிரவு நிலநடுக்கம்!
பதுளை: ஹப்புத்தளை தம்பேதன்ன பிரதேசத்தில் உள்ள மவுசாக்கலை பெருந்தோட்டத்தின் சுமார் 600 தமிழ் தொழிலாளர் குடும்பங்கள் அவசரமாக சுமார் 6 கிலோமீற்றருக்கு அப்பாலுக்கு புதுக்காடு என்ற இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. நேற்றிரவு இரவு 7.45க்கும் 8 மணிக்கும் இடையில் குறித்த தோட்டத்தில் உள்ள சுமார் 10 லய்ன் குடியிருப்புகளின் கூரைகள் நிலநடுக்கத்தில் நடுங்குவதைப் போன்று சத்தத்துடன் நடுங்கியுள்ளன.
-
‘நல்லாட்சியை ஏற்படுத்துவதில் ஏனைய சமூகங்களை விடவும் அதிக பங்களிப்பினைச் செய்ய வேண்டிய கடமை முஸ்லிம்களுக்கே இருக்கிறது’- ஏறாவூரில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்
NFGG ஊடகப்பிரிவு ஏறாவூர்: ‘இந்நாட்டில் சகல மக்களும் சுபீட்சமாக வாழக்கூடிய நல்லாட்சியொன்றை ஏற்படுத்துவதற்கான வேலைத் திட்டத்தில் ஏனைய சமூகங்களை விடவும் முஸ்லிம் சமூகமே கூடுதல் பங்களிப்பை செய்ய வேண்டும்.’ என நல்லாட்கிக்கான தேசிய முன்னணி (NFGG) யின் தலைவர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
-
மைத்திரியை ஆதரித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மக்கள் சந்திப்பு ஓட்டமாவடியில் இடம்பெற்றது
NFGG ஓட்டமாவடி: பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் ஓட்டமாவடி பிரதேசத்தில் மக்கள் சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றது.
-
‘திஸ்ஸவுக்கு ஒரு கப் கோப்பி, ரணிலுக்கு ஒரு டீ போதும்’
அனுராதபுரம்: எங்கள் கட்சி செயலாளர் எதிர்கட்சிக்கு போனார் அதற்கு பதிலாக ஐ.தே.க பொது செயலாளரை எம் பக்கம் மாற்றினோம் இப்பொழுது அவர் சுகாதார அமைச்சரானார். அவருக்கு நான் ஒரு கப் கோப்பியை தான் கொடுத்தேன் எம் பக்கம் வந்துவிட்டார். இதே போல் ரணிலுக்கு ஒரு கப் டீயை கொடுத்தால் அவரும் எம் பக்கம் வந்து விடுவார் இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த நேற்று அனுராதபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.