மண்முனை பற்று பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்வின் எழுச்சி திவிநெகும பயனாளிகள் 600 பேருக்கு மானிய உதவி 2500 ரூபாய் வழங்கி வைப்பு

hizbullah (2)– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: ‘செழிப்பான இல்லம்’ எனும் தொனிப்பொருளில் வாழ்வின் எழுச்சி திவிநெகும உதவிபெறும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த வறிய குடும்பங்களுக்கு வீடுகளை திருத்துவதற்கான வீட்டு மானிய உதவிகளை வழங்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு குடும்பத்திற்கு 2500 ரூபாய் வீதம் சுமார் 5000 வாழ்வின் எழுச்சி திவிநெகும பயனாளிகளுக்கும் வீட்டு மானிய உதவி வழங்கும் திட்டத்தில் சுமார் 600 பேருக்கு வீட்டு மானிய உதவி வழங்கும் நிகழ்வு 11-12-2014 இன்று வியாழக்கிழமை காங்கேயனோடை அல்-அக்ஷா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

hizbullah (2)

வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்கத்தின் ஆரையம்பதி பிரதேச திவிநெகும பொறுப்பாளர் ஆர்இராசலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு மேற்படி 600 பேருக்கு வீட்டு மானிய உதவித் தொகை 2500 ரூபாவை வழங்கி வைத்தார்.

hizbullah (3)

இந்நிகழ்வில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின் ,வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்கத்தின் ஆரையம்பதி பிரதேச திவிநெகும உத்தியோகத்தர்கள் உட்பட பெருமலவிளான திவிநெகும பயனாளிகளும் பிரசன்னமாயிருந்தனர்.

Published by

Leave a comment