Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • பொலிஸாருக்கு ரி.56 துப்பாக்கிகள்: நியாயமான அதிகாரத்தை பயன்படுத்த பொலிஸாருக்கு உத்தரவு

    கொழும்பு: எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சேவையில் ஈடுபடுத்தப்படும் 61ஆயிரம் பொலிஸாருக்கும் ரி 56 ரக துப்பாக்கிகளை சேவையின் போது பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இந்தநிலையில் தேவையேற்படின் நியாயமான அதிகாரத்தை பயன்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

  • வாக்குப் பெட்டிகள் அனுப்பிவைப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் 7 வது ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்த நிலையில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் இயங்கும் மாவட்ட தேர்தல் செயலகத்திலிந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட தெரிவத்தாட்சி அலுவளருமான திருமதி. பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

  • இந்த ஆண்டில் லீப் விநாடியாக ஒரு விநாடி அதிகரிக்கப்படவிருக்கிறது!

    பரிஸ்: இந்த ஆண்டில் லீப் விநாடியாக ஒரு விநாடி அதிகரிக்கப்படவிருப்பதாக பரிஸில் இருக்கும் அவதானிப்பகம் அறிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி கடிகாரம் இரவு 11:59:60 மணியை காட்டும்போது மேலதிகமாக ஒரு விநாடி இணைக்கப்படவுள்ளது. மிக துல்லியமான அணுக் கடிகாரத்திற்கும் பூமியின் சுழற்சிக்கும் இடையில் ஏற்படும் சிறு வேறுபாட்டை கணக்கில் கொண்டே லீப் விநாடி இணைக்கப்படுவதாக பிரான்ஸை மையமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச புவி சுழற்சி மற்றும் ஒப்பீட்டு காரணி அமைப்பு குறிப்பிட் டுள்ளது.

  • “கட்சிகளுக்கோ, வேட்பாளர்களுக்கோ மத அனுட்டானங்கள் வேண்டாம்”

    கொழும்பு: குறித்த தொரு அரசியல்கட்சிக்கோ அல்லது வேட்பாளருக்கோ ஆசிவேண்டி, சமய அனுட்டானங்களில் ஈடுபடுவதனை தவிர்த்துக் கொள்ளுமாறும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மதத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல்கள் ஆணையாளர் என்ற வகையில், சமய விவகாரங்களில் தலையிடுவதற்கான அதிகாரம் தமக்கு இல்லாத போதும்,

  • ‘ஜனாதிபதி தேர்தல்’ நாளை 8ம் திகதி: CCTV பயன்படுத்தப்படுகிறது என்பது பொய்யானது

    கொழும்பு: இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ‘ஜனாதிபதி தேர்தல்’ நாளை (08) நாடு முழுவதும் நடாத்தப்படவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

  • தேர்தல் சதி முயற்சிகளும் அதற்கு எதிரான நடவடிக்கைகளும்

    கொழும்பு: தேர்தல் தொடர்பில் பல சதி நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி மகிந்த தலைமையிலான அரசு தயாராகி வந்த நிலையில் அதனை அறிந்து எதிர் நடவடிக்கையில் தேர்தல் ஆணையாளர் ஈடுபட்டுள்ளார் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • பெண்களுக்கும் வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் ஜூம்மா பள்ளிவாயலில் பெண்களுக்கான தொழுகை அறை திறந்து வைப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: பெண்களுக்கும் வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் மட்டக்களப்பு நகரிலுள்ள ஜாமிஉஸ் ஸலாம் ஜூம்மா பள்ளிவாயலில் பெண்களுக்கான தொழுகை அறையொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

  • அபாயா அணிந்து முகத்தை மறைத்து வாக்குச்சாவடிகளுக்குச் செல்லும் முஸ்லிம்களுக்கு மேலதிக தேர்தல் ஆணையாளர் அறிவுறுத்தல்

    கொழும்பு: அபாயா அணிந்து முகத்தை மறைத்துக்கொண்டு வாக்குச்சாவடிகளுக்குச் செல்லும் முஸ்லிம் பெண்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம். முஹமட் விளக்கமளித்துள்ளார்.

  • சட்டவிரோத பிரச்சாரம் தொடர்வதாக குற்றச்சாட்டு

    கொழும்பு: ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த கால எல்லை முடிவடைந்துவிட்ட போதிலும் சட்டவிரோத தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக பப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இவ்வாறான பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

  • மைத்திரியை ஆதரித்து காத்தான்குடியில் நடைபெற்ற இறுதிப் பிரச்சாரக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

    காத்தான்குடி: எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன அவர்களை ஆதரித்து காத்தான்குடியில் நேற்று நடைபெற்ற இறுதிப் பிரச்சாரக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். ஐக்கிய தேசிய கட்சி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளும் கூட்டாக ஏற்பாடு செய்திருந்த ஜனாதிபதித் தேர்தல் 2015லின் இறுதிப் பிரச்சாரக் கூட்டம் காத்தான்குடி, ஊர் வீதி, சின்னப்பள்ளி முன்றலில் நடைபெற்றது.

  • காத்தான்குடியின் தேர்தல் களம்

    – அவதானி காத்தான்குடி: இலங்கை முஸ்லிம் நகரங்களில் வேறு எங்கும் இல்லாத ஆர்வம் காத்தான்குடி அரசியலிலும் முதல் இடத்தில் இருக்கின்றமை மறக்க முடியாது. அருகிலுள்ள ஆரையம்பதி மக்களும், நாவற்குடா மக்களும் அமைதியாக தூங்கி எழுந்து தங்களது வாக்கை நிறைவேற்றக்காத்திருக்கும் இத்தருணத்தில், காத்தான்குடி நகரம் வழமைபோன்ற தேர்தல் சூட்டின் உச்ச கட்டத்தில் இருக்கின்றது.

  • தேர்தல் சட்டங்களை தெரிந்து கொண்டு செயற்படுவோம்

    அப்துல் அஸீஸ் மட்டக்களப்பு: நடைபெறவிருக்கும் தேர்தலின் போது கண்காணிப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டோர் அவதானிப்பாளர்களாக  இருப்பதுடன் தேர்தல் சட்டங்கள் பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். நீதியானதும், சுதந்திரமான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே மக்களது அபிலாசைகளாக இருப்பதால் தேர்தல் சட்டங்களை தெரிந்து கொண்டு செயற்படுவோம் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

←Previous Page
1 … 565 566 567 568 569 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar