காத்தான்குடி: இலங்கை முஸ்லிம் நகரங்களில் வேறு எங்கும் இல்லாத ஆர்வம் காத்தான்குடி அரசியலிலும் முதல் இடத்தில் இருக்கின்றமை மறக்க முடியாது. அருகிலுள்ள ஆரையம்பதி மக்களும், நாவற்குடா மக்களும் அமைதியாக தூங்கி எழுந்து தங்களது வாக்கை நிறைவேற்றக்காத்திருக்கும் இத்தருணத்தில், காத்தான்குடி நகரம் வழமைபோன்ற தேர்தல் சூட்டின் உச்ச கட்டத்தில் இருக்கின்றது.
கட்சிகளும் குழக்களும்:
பிரயமைச்சர் ஹிஸ்புல்லாவும் அவருக்குரிய தற்போதய ஆதரவாளர்களும் மஹிந்தவை ஆதரிக்கின்றனர். மறுபக்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய நான்கு அரசியல் கட்சிகளும் கூட்டாக இணைந்து பொதுவேட்பாளர் மைத்திரியை ஆதரிக்கின்றனர்.
தலைவர்கள்:
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தங்களது வேட்பாளரை ஆதரிக்கும் முயற்சியில் குறிப்பாக இயங்கும் ஐந்து தலைவர்களை இங்கு குறிப்பிடலாம்.
இந்தவகையில்,
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் (ஆளும் கூட்டணி)
பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் (NFGG)
பொறியியலாளர் சிப்லி பாரூக் (அ.இ.ம.கா)
முபீன் ஆசிரியர் (SLMC)
சல்மா அமீர் ஹம்ஸா (SLMC)
மேற்படி ஐந்து முக்கிய புள்ளிகளுள் காத்தான்குடியின் சமகால அரசியல் களத்தில் அதிகமாகப் பேசப்படுபவரே பொறியியலாளர் சிப்லி பாரூக் ஆவார்.
சல்மா அமீர் ஹம்ஸா:
தனக்குரிய WEDF எனும் பொது அமைப்பினூடாக இச்சமூகத்திற்கு வாழ்வாதார உதவிகளை வழங்கிவரும் நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸா, தேர்தல்காலங்களில், தான் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காக மக்களை குறிப்பாக பெண்களை ஒன்று திரட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
சல்மா அமீர் ஹம்ஸாவின் சமூக சேவைகள் காரணமாகவும், காத்தான்குடியின் முதல் அரசியல் பெண்மணி என்ற வகையிலும், அதிகமான பெண்களின் ஆதரவுகள் சல்மா அமீர் ஹம்ஸாவுக்கு இருந்துவருவதும் அவதானிக்கத்தக்கது.
ஆதரவாளர்கள்:
ஹிஸ்புல்லாஹ்வுக்கு என்றே தனியாக 10,000 வாக்குகள் காத்தான்குடி பிரதேசத்தில் அண்மைக்காலம் வரை இருந்து வந்தன. இவ்வாக்குகளுள் மௌலவி அப்துர் ரஊப் தரப்பு வாக்குகளும் உள்ளடங்கும். ஆனால் பொறியியலாளர் சிப்லி பாரூக், ஹிஸ்புல்லாஹ் தரப்பிலிருந்து பிரிந்து, அ.இ.ம. காங்கிரஸூன் இணைந்து மைத்திரியை ஆதரிப்பதால், தற்பொழுது 3ம் தரப்பு அரசியல் காத்தான்குடியில் பிரதானமாக பேசப்பட்டு வருகிறது.
இதுவரைக்கும் ஹிஸ்புல்லாஹ், மற்றும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் என்ற இரு பெரும் பிரிவுகளாக காணப்பட்ட மக்களின் ஆதரவுகள், இம்முறை மேலும் ஒன்றாக பிரிந்திருக்கின்றது.
மைத்திரிக்கு என்று தற்பொழுது ஆதரவுகள் எழுந்தாலும் மறைமகமாக சிப்லி பாரூக்கிற்கான ஆதரவுகளாக இவை காணப்படுகின்றன.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் காலங்களில் மாத்திரமே ஊரில் இயங்குவதாலும், வேறு எந்த சந்தர்ப்பத்திலும் காத்தான்குடி மக்களுடன் சேர்ந்திராத அமைப்பாகவும் இருந்து வருகிறது.
ஹிஸ்புல்லாஹ்வுக்கு செல்லும் 10,000 வாக்குகளைத் தவிர, ஏனைய சுமார் 15,000 வாக்குகளும் கலைந்து செல்லும் நிலையே அண்மைவரை காத்தான்குடியில் காணப்பட்டது.
தற்பொழுது ஹிஸ்புல்லாஹ் தரப்பு வாக்குகளில் பல, சிப்லி பாரூக்கை நோக்கி திரும்பி இருக்கின்றன. இதே போல், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்துள்ளவர்களின் வாக்குகளும் சிப்லி பாரூக்கின் பக்கம் திரும்பி இருக்கின்றதைக் காண முடிகிறது.
தலம்பல் வாக்குகள்:
காத்தான்குடியைப் பொறுத்த மட்டில் தலம்பல் வாக்குகள் இன்றியமையாதவை. இன்னும் இந்த தலம்பல் நிலையில் சில வாக்காளர்கள் இருப்பதை அவதானிக்கவே முடிகிறது. இந்ததத் தலம்பல் வாக்குகள் ஹிஸ்புல்லாஹ் தரப்பையே அதிகமாப் பாதிப்புக்குள்ளாக்கும் நிலை தோற்றம் பெற்றிருக்கின்றன
இறுதிவரை குலம்பிப்போய், தேர்தல் தினத்தன்று, இறுதிமுடிவை எடுக்கும் வாக்காளர்கள் தலம்பல் வாக்காளர்கள் என குறிப்பிடலாம். சில வேலை இத்தகைய வாக்குகள் நிராகரிக்கப்படவும் காரணங்களாக அமையும்.
எனினும், காத்தான்குடி அரசியலில் பல மாற்றங்கள் தற்பொழுது நிகழ்ந்திருப்பதால் தலம்பல் வாக்குகள் இன்றியமையாதவையாக இருக்கும்.
மௌலவி அப்துர் ரஊப் தரப்பு:
ஹிஸ்புல்லாஹ்வுடன் நேரடி மற்றம் மறைமுக ஒப்பந்தத்தில் அடிப்படையில் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர் மௌலவி அப்துர் ரஊப் தரப்பு. ஆனால் பத்ரிய்யாவைப் பொருத்தமட்டடில் மௌலவி அப்துர் ரஊபின் ஆதரவாளர்கள் அனைவரும் மஹிந்தவுக்கே வாக்களிப்பார்களா என்ற சந்தேகம் பத்ரியாயாவில் எழுந்துள்ளது.
மார்க்க விடயத்தில் ஒருமித்திருந்தாலும், புதிய ஆட்சி மாற்றத்தை விரும்பும் பல முஹிப்பீன்கள் அங்கும் இருக்கத்தான் செய்கின்றனர்.
தஃவா இயக்கங்கள்:
அரபு நாட்டு பணங்களை வரவழைத்து தஃவா என்ற பேரில் செயற்படும் தஃவா இயக்கங்கள் சில ஆளும் அரசாங்கத்தை ஆதரிக்கின்றன. அவர்களுக்குள்ள பண விடயங்களைக் கையாள ஆளும் தரப்பு இவ்வியக்கங்களுக்கு இன்றியமையாதவையாக இருக்கின்றன.
ஆனாலும் தேசிய தௌஹீத் ஜமாஅத் மாத்திரமே காத்தான்குடி மாத்திரமன்றி, இலங்கை வரலாற்றில் முதன் முதலாக தங்களது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள ஓர் தஃவா இயக்கமாக திகழ்கின்றது. ஆனாலும், தௌஹீத் வாதிகள் என தங்களைக் கூறிக்கொள்ளும் அதிகமானவர்களை மைத்திரியின் தேர்தல் கூட்டங்களில் காணக்கூடியதாக இருந்தன.
மக்களின் நிலை:
இலங்கை மக்களில் அதிகமானவர்கள் எவ்வாறு ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனரோ அதே போல் காத்தான்குடியிலும் ஓர் ஆட்சிமாற்றத்தை காத்தான்குடி மக்கள் விரும்புகின்றனர் என்பதை அவதானிக்க முடிகிறது. இதற்கு கடந்த கால தேர்தல் மேடைகளும், மக்களின் வாக்குறுதிகளும் பலமாக அமைகின்றன.
வாக்களிப்பு நிலையங்களும் குழப்பங்களும்:கள்ள வாக்குகளை அளிப்பதன் மூலமே வாக்குச் சாவடிகளில் சண்டைகள் ஆரம்பிக்கின்றன. எனவே தங்களது வாக்கை தாங்களே அளிக்கும்போது அதை எவராளும் தடுத்து நிறுத்த முடியாது. எனவே வாக்கு அட்டையுடன் அடையாள அட்டையையும் எடுத்துச் செல்வது சிறந்ததாகும்.
மெத்தைப்பள்ளி வித்தியாலயம், கலாச்சார மண்டபம், மில்லத் மகளிர் வித்தியாலயம், முஹ்ஸின் மௌலானா ஆகிய வாக்கெடுப்பு நிலையங்கள் கள்ள வாக்கு நிலையங்களாக கடந்த தேர்தலின்போது அடையாளப்படுத்தப்பட்டிருந்தன. இங்கு ஆண்களும் பெண்களும் கள்ள வாக்குகளை அளிக்க முற்படுகையில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்ததுடன், இதன் காரணமாக கலவரங்களும் ஏற்பட்டன.
கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாத போது பொலிஸாரின் உதவி தேவைப்படும். இந்நிலையில் துப்பாகியை பொலிஸார் பயன்படுத்த வேண்டிய நிலை இவ்வாக்களிப்பு நிலையங்களில் ஏற்படுகின்றன.
இதன் காரணமாக வாக்களிக்க வரும் பெண்கள் சிறுவர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் வாக்களிப்பு நிலையக் கலவரம் காத்தான்குடியிலேயே ஆரம்பிக்கப்பட்டிருந்தமை இலங்கை ஊடகங்களின் தலைப்புச் செய்தியாகப் பதிவாகி இருந்தமை வரலாறு.
எனவே கள்ள வாக்கு அளிப்தைத் தவிர்ப்பது மார்க்கத்திற்கும் சமூகத்துகும் நல்லது.
அன்று ஒருமித்திருந்தவர்கள் இன்று பிரிந்திருக்கின்றனர். அதே போல் அன்று பிரிந்திருந்தவர்கள் இன்று ஒன்றிணைந்திருக்கின்றனர். எனவே கள்ள வாக்கு அளிப்பதில் இம்முறை பாரிய சிக்லை கள்ளவாக்களிக்கும் கட்சி எதிர்நோக்கும்.
இப்போதெல்லாம் ஸ்மார்ட் தொலைபேசிகளை பலர் கைகளில் வைத்துக்கொண்டிருப்பதால், இவ்வாரான சமூக விரோத செயல்களை இலகுவாக படம்பிடித்து அவைகளை சமூகவலைத்தளங்களில் வலம்விட அதிக நேரம் போகாது.
வெற்றி:
அல்லாஹ் எந்த வேட்பாளரை இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு நாடியுள்ளானோ, அவரே வெற்றிபெறுவார். இன்ஷா அல்லாஹ் காத்திருப்போம்.
Published by
![ballot_box1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/ballot_box11.jpg?w=150&h=113)
Leave a comment