காத்தான்குடி: எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன அவர்களை ஆதரித்து காத்தான்குடியில் நேற்று நடைபெற்ற இறுதிப் பிரச்சாரக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். ஐக்கிய தேசிய கட்சி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளும் கூட்டாக ஏற்பாடு செய்திருந்த ஜனாதிபதித் தேர்தல் 2015லின் இறுதிப் பிரச்சாரக் கூட்டம் காத்தான்குடி, ஊர் வீதி, சின்னப்பள்ளி முன்றலில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் அல்ஹாஜ் பைசர் முஸ்தபா (பா.உ), நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில் அதன் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான், தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி), தலைமைத்துவசபை உறுப்பினர் அஷ்ஷெய்க் ALM.சபெல் (நளீமி), அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக், MIM.முஜீப், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அதன் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் ULMN.முபீன் (BA), முன்னாள் காத்தான்குடி நகரசபை தவிசாளர் மர்சூக் அஹ்மத் லெப்பை, ஐக்கிய தேசிய கட்சி சார்பில் அதன் காத்தான்குடி அமைப்பாளர் HMM.முஸ்தபா, KM.அலியார் உள்ளிட்ட பலர் உரையாரினார்கள்.
இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
அத்துடன் அங்கு கலந்துகொண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன அவர்களுக்கு ஆதரவளிக்கின்ற மகிழ்ச்சியில் அவருடைய உருவப்படங்களையும் தம் வசம் வைத்திருந்தனர்.
Published by




Leave a comment