பரிஸ்: இந்த ஆண்டில் லீப் விநாடியாக ஒரு விநாடி அதிகரிக்கப்படவிருப்பதாக பரிஸில் இருக்கும் அவதானிப்பகம் அறிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி கடிகாரம் இரவு 11:59:60 மணியை காட்டும்போது மேலதிகமாக ஒரு விநாடி இணைக்கப்படவுள்ளது. மிக துல்லியமான அணுக் கடிகாரத்திற்கும் பூமியின் சுழற்சிக்கும் இடையில் ஏற்படும் சிறு வேறுபாட்டை கணக்கில் கொண்டே லீப் விநாடி இணைக்கப்படுவதாக பிரான்ஸை மையமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச புவி சுழற்சி மற்றும் ஒப்பீட்டு காரணி அமைப்பு குறிப்பிட் டுள்ளது.
‘பூமியின் சுழற்சி சற்று மந்தமடைந்து வருகிறது” என்று அமெரிக்க கடற்படை அவதான நிலையத்தின் தலைவரான நிக் ஸ்டமடகோஸ் குறிப்பிட்டுள்ளார். ‘அணுக் கடிகாரங்கள் துல்லியமான நேரத்தை காட்டி வருகின்றன. இந்த கணக்கெடுப்பு மூலம் அது மந்தமடை வது எமக்கு தெரிகிறது” என்றும் அவர் குறிப்பிட்டுள் ளார். முதல் முறையாக லீப் விநாடி 1972 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. அது தொடக்கம் கடிகார வரலாற்றில் 26 தடவைகள் மாற்றப்பட்டது.
‘மேலதிகமாக விநாடி சேர்க்கப்படுவது யு.டி.சி. (ஒருங்கிணைக்கப்பட்ட பிரபஞ்ச நேரம்) என அழைக்கப்ப டுகிறது. இதன்மூலம் அணுக் கடிகாரம் துல்லியமானது என உறுதிப்படுத்துகிறது” என்று ஸ்டமடகோஸ் குறிப்பிட்டார். அதாவது எதிர்வரும் ஜ{ன் 30 ஆம் திகதி இரவு 11:59:59 மணியின்போது மேலதிக ஒரு விநாடி கழித்தே 11:59:60 விநாடியை காட்டும்.
“அன்றைய தினத்தில் (ஜூன் 30) 86,400 விநாடிக்கு பதில் 86,401 விநாடிகளாக இருக்கும். இதனால் நீங்களும் நானும் உலகில் இருக்கும் அனைவரும் ஒரு மேலதிக விநா டியை பெறுவார்கள்” என்றார். அண்மைக் காலத்தில் லீப் விநாடிகள் அரிதாகவே இணைக்கப்படுகின்றன. 1972 முதல் 1979 ஆம் ஆண்டுவரை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஒரு விநாடியாவது மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளது. 1980 களில் ஆறு தடவைகள் லீப் விநாடிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் 1999 வரையான காலத்தில் நான்கு தடவைகள் மாத்திரமே லீப் விநாடிகள் சேர்க்கப்பட்டுள் ளன.
இவை அனைத்தும் பௌதிக விதிக ளுக்கு அமையவே செயற்படுத்தப்படுவ தாக ஸ்டமடகோஸ் குறிப்பிட்டார்.
‘1970களை விடவும் பூமி (தற்போது) மெதுவாக சுழல்வதென்று அர்த்தம் இல்லை. 1970களுடன் தொடர்புபடுத்திப் பார்த்தால் நாம் சற்று விரைவடைந்திருக்கிறோம். ஆனால் அணுக் கடிகாரத்தை விடவும் நாம் சற்று மெதுவாகவே இருக்கிறோம்” என்றார்.
கடைசியாக 2012 ஆம் ஆண்டு லீப் விநாடி சேர்க்கப் பட்டது. இது இணையதளங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. பிரதான நிறுவனங்களான மொசில்லா, ரெட்டிட் மற்றும் கவ்கர் நிறுவனங்கள் மென்பொருள் தவறால் செயலிழப்பை சந்தித்தது. இதில் ஜூன் 30 திகதி மேற்கொள்ளப்படும் லீப் விநாடி மாற்றம் வரலாற்றில் காடைசியானதாக இருக்க வாய்ப்பு உள்ளது.
இந்த ஆண்டு கடைசியில் இடம்பெறவிருக்கும் ரேடியோ தகவல்தொடர்பு சபை மற்றும் உலக ரேடியோ தகவல் தொடர்பு மாநாட்டில் இந்த லீப் விநாடி முறையை அகற்றுவது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப் படவுள்ளது. இந்த வாக்கெடுப்பு 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட விருந்தபோதும் அது பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.
எனினும் இந்த விடயம் தொடர்ந்து விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. துல்லியமான நேரத்தை கணிப்பதற்கு இந்த லீப் முறை அவசியம் என்று அதற்கு ஆதரவானவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இவ்வாறு நேரத்தை அடிக்கடி மாற்றுவதால் எந்தப் பயனும் இல்லை என்று இதற்கு எதிரானவர்கள் கூறி வருகின்றனர். இவ்வாறு லீப் விநாடி மாற்றம் நிகழாத பட்சத்தில் 2100 ஆம் ஆண்டாகும்போது இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் பின்தங்கி விடுவதோடு 2700 ஆம் ஆண்டாகும்போது சுமார் அரை மணிநேரம் பின்தங்கி விடுவோம் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment