பெண்களுக்கும் வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் ஜூம்மா பள்ளிவாயலில் பெண்களுக்கான தொழுகை அறை திறந்து வைப்பு

unnamedபழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: பெண்களுக்கும் வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் மட்டக்களப்பு நகரிலுள்ள ஜாமிஉஸ் ஸலாம் ஜூம்மா பள்ளிவாயலில் பெண்களுக்கான தொழுகை அறையொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

15 இலட்சம் ரூபாய் செலவில்  பெண்களுக்கென பிரத்தியேகமாக  நிர்மாணிக்கப்பட்ட இத் தொழுகை அறை திறந்து வைக்கும் நிகழ்வு 06-01-2015 செவ்வாய்க்கிழமை பிற்பகல் அஷர் தொழுகையை தொடர்ந்து ஜாமிஉஸ் ஸலாம் ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.

இதன் போது நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் என்.எம்.எம். அப்துல்லாஹ் மேற்படி தொழுகை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

இத் தொழுகை அறைக்கான 15 இலட்சம் ரூபாய் நிதியுதவியை தனவந்தர்கள், பொது மக்கள் வழங்கியதாகவும் பெண்களுக்கும் வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான ஹாஜியானி சல்மா அமீர் ஹம்ஸா தெரிவித்தார்.

மட்டக்களப்பு  ஜாமிஉஸ் ஸலாம் ஜூம்மா பள்ளிவாயல் செயலாளர் எம்.எஸ்.எம். சாலி தலைமையில் இடம்பெற்ற இந்ந நிகழ்வில் பெண்களுக்கும் வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவி சல்மா அமீர் ஹம்ஸா உட்பட உலமாக்கள், ஊர் பிரமுகர்கள், ஜாமிஉஸ் ஸலாம் ஜூம்மா பள்ளிவாயல் நிர்வாக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு திறந்து வைக்கப்பட்ட பெண்களுக்கான தொழுகை அறையினால் மட்டக்களப்பு நீதிமன்றம், மட்டக்களப்பு மாவட்ட செயலகம், பாடசாலைகள், அரச திணைக்களங்கள் ஆகியவற்றில் கடமையாற்றும் முஸ்லிம்  உத்தியோகத்தர்கள், பிரயாணிகள் நன்மையடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment