Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • “புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் ஆரம்பம்”: பிரதமர்

    கொழும்பு: கசினோ தொடர்பாக விசேட தீர்மானமொன்றை அமைச்சரவை எடுத்துள்ளது. இதற்கமைய மூலோபாய அபிவிருத்தி செயற்றிட்ட சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை திருத்தியமைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

  • 100 நாள் புரட்சி

    கொழும்பு: புதிய ஜனநாயக முன்னணி அரசின் 2015 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று பிற்பகல் 1.38 அளவில் வரவு, செலவுத் திட்ட யோசனைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றினார்.

  • தந்தையின் சிறப்பு

    – அகமட் தீதத் தாயும் தந்தையும் ஒருவனுக்குத் தன் இரண்டு கண்களைப் போல் மதிப்புமிக்கோர் ஆவர். இவ்வுலகில் ஒருவன் பிறப்பதற்காக அவ்விருவரும் படும் சிரமங்களும் துன்பங்களும் வார்த்தைகளுக்குள் அடங்குவன இல்லை. பெற்றெடுத்த பிள்ளையைச் சீராட்டி வளர்த்து நல்லொழுக்கம் கற்பித்துக் கல்வியைப் போதித்து தன்னைவிடச் சிறந்தவனாய் உயர வேண்டுமென நினைப்பவர் தந்தை.

  • காத்தான்குடி ஊடகவியலாளர்கள் ‘மரணிக்க’வில்லை

    – AK 48 காத்தான்குடி: நேற்று 29-01-2015 காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சகோதரர் சியாட், காத்தான்குடி நகரசபையில், ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்விற்கு காத்தான்குடி ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். சுதந்திரமாக இடம்பெற்ற இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் நகரசபை உறுப்பினர் சியாட், தனது கடந்த கால மற்றும் சமகால அரசியல் நிலவரம் சார்பான கருத்துக்களை முன்னெடுத்துக் கூறினார்.

  • மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் இடைக்கால வரவுசெலவுத் திட்டம் 2015

    கொழும்பு: இலங்கையின் புதிய அரசாங்கம் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால – பிரதமர் ரணில் தலைமையிலான புதிய அரசாங்கம் இந்த இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில், மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான வாக்குறுதிகளையும் அரசாங்கத்தின் செலவுகளைக் குறைப்பதற்கான திட்டங்களையும் முன்வைத்துள்ளது. 

  • தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து ஷிராணி ஒரு நாளில் ஓய்வு

    கொழும்பு: உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவை வரவேற்கும் வைபவத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தான் ஒய்வு பெற்ற பின்பு வெற்றிடமாகும், இலங்கையின் 44ஆவது தலைமை நிதிபதி பதவிக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக செயற்படும் கே. ஸ்ரீபவன் நியமிக்கப்பட்டால் அது தொடர்பாக தான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார். 

  • ஷிப்லி பாறுக் பள்ளிவாயலில் ஆற்றிய உரை தொடர்பில் பொது ஜன ஐக்கிய முன்னணி காத்தான்குடி மத்திய குழு கடிதம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் பள்ளிவாயலில் ஆற்றிய உரை தொடர்பில் பொது ஜன ஐக்கிய முன்னணி காத்தான்குடி மத்தியகுழு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

  • தவிசாளர் அஸ்பர் அதிகார துஸ்பிரயோகம் செய்துள்ளார்: உறுப்பினர் ஸியாட் ஊடகங்களுக்கு குற்றச்சாட்டு: காணொளி

    முகம்மட் சஜீ காத்தான்குடி: காத்தான்குடி நகரசபையின் தவிசாளர் அஸ்பர் கடந்த ஊடக சந்திப்பொன்றின் போது இம்மாத இறுதிக்குள் தான் ஊழல் அதிகார துஸ்பிரயோகம் செய்திருந்தால் 10 நாட்களுக்குள் நிறுபிக்குமாறு எதிர் கட்சிகளுக்கு காத்தான்குடி நகரசபையின் தவிசாளர் அரையில் வைத்து சவால் ஒன்றை விடுத்திருந்தார். 

  • முஸ்லிம்கள் இந்திய வீட்டுத்திட்டத்தில் புறக்கணிப்பு

    இர்ஷாத் றஹ்மத்துல்லா  மன்னார்: மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் மீள் குடியேறியுள்ள முஸ்லிம்கள் இந்திய வீட்டுத்திட்டத்தில் புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாந்தை மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் எம்.நவ்பீல் தெரிவித்துள்ளார். 

  • சாய்ந்தமருது பிரதேச செயலக திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவைநலன் பாராட்டு விழா

    ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: சாய்ந்தமருது பிரதேச திவிநெகும உத்தியோகத்தர் ஏ.சீ.ஏ.நஜீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம், மாவட்ட திவிநெகும பணிப்பாளர் யூ.பி.எஸ்.அனுருத்த பியதாச, மாவட்ட திவிநெகும பிரதிப் பணிப்பாளர் ஐ.அலியார், சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் எம்.எம்.உசைனா, நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெவ்வை, திவிநெகும முகாமையாளர்களான எஸ்.றிபாயா, ஏ.ஆர்.எம். பர்ஹான், 

  • காத்தான்குடி நகர சபையில் நான் ஊழல் செய்யவில்லை: அழிவுச் சத்தியத்திற்கு தயார் என்கிறார் நகர சபை உறுப்பினர் சியாட்- ஓடியோ ஒலிப்பதிவு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நகர சபையில் நான் ஊழல் செய்யவில்லையெனவும் அது தொடர்பில் தான் அழிவுச் சத்தியத்திற்கு தயாராக இருப்பதாகவும் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சியாட் தெரிவித்தார். 

  • கதீப்மார்களுக்கான இரண்டு நாள் தலைமைத்துவப் பயிற்சிக் கருத்தரங்கு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், வக்பு, அழைப்பு மற்றும் வழிகாட்டலுக்கான அமைச்சும், காத்தான்குடியில் இயங்கும் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியும் இணைந்து உலமாக்கள், கதீப்மார்களுக்கான இரண்டு நாள் தலைமைத்துவப் பயிற்சிக் கருத்தரங்கொன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

←Previous Page
1 … 538 539 540 541 542 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar