100 நாள் புரட்சி

ravi budjetகொழும்பு: புதிய ஜனநாயக முன்னணி அரசின் 2015 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று பிற்பகல் 1.38 அளவில் வரவு, செலவுத் திட்ட யோசனைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றினார்.

சுமார் 120 நிமிட நேரம் இவரது உரை நீடித்தது. வரவு – செலவுத் திட்டத்தில் வாழ்க்கைச் சுமையில் இருந்து மக்களை மீட்டெடுக்கும் வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கின்றன.

ravi budjet

சமையல் எரிவாயு, பால்மா, கோதுமை மா, சீனி, பாசிப்பயறு, மாசி, உழுந்து, கொத்தமல்லி, செத்தல் மிளகாய். பாண் உட்பட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் மக்கள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, “100 நாள் புரட்சி” ஆக நிதி அமைச்சரினால் இந்த வரவு செலவுத் திட்டம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.

Published by

Leave a comment