தவிசாளர் அஸ்பர் அதிகார துஸ்பிரயோகம் செய்துள்ளார்: உறுப்பினர் ஸியாட் ஊடகங்களுக்கு குற்றச்சாட்டு: காணொளி

siyathமுகம்மட் சஜீ

காத்தான்குடி: காத்தான்குடி நகரசபையின் தவிசாளர் அஸ்பர் கடந்த ஊடக சந்திப்பொன்றின் போது இம்மாத இறுதிக்குள் தான் ஊழல் அதிகார துஸ்பிரயோகம் செய்திருந்தால் 10 நாட்களுக்குள் நிறுபிக்குமாறு எதிர் கட்சிகளுக்கு காத்தான்குடி நகரசபையின் தவிசாளர் அரையில் வைத்து சவால் ஒன்றை விடுத்திருந்தார். 

எதிர் கட்சிகளின் பதில் ஒருபுரம் இருக்க 29/01/2015 நகரசபையின் உறுப்பினர் முகம்மட் ஸியாட் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை காத்தான்குடி நகரசபையின் பிரதித் தவிசாளர் அரையில் கூட்டி இருந்தார்.

இதன்போது நகரசபையின் உறுப்பினர் முகம்மட் ஸியாட் தவிசாளர் அஸ்பர் அதிகார துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும் தன்னிச்சயாக இயங்குவதாகவும் ஸியாட் ஊடகங்களுக்கு குற்றம் சாட்டினார். இங்கு ஊடகவியலாளர்களின் அதிரடியான கேள்விகளுக்கும் உறுப்பினர் முகம்மட் ஸியாட் அசையாது பதில் அளித்தார். 

Published by

Leave a comment