காத்தான்குடி ஊடகவியலாளர்கள் ‘மரணிக்க’வில்லை

siyath– AK 48

காத்தான்குடி: நேற்று 29-01-2015 காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சகோதரர் சியாட், காத்தான்குடி நகரசபையில், ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்விற்கு காத்தான்குடி ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். சுதந்திரமாக இடம்பெற்ற இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் நகரசபை உறுப்பினர் சியாட், தனது கடந்த கால மற்றும் சமகால அரசியல் நிலவரம் சார்பான கருத்துக்களை முன்னெடுத்துக் கூறினார்.

இதன்பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கேள்விகளைக் கேட்பதற்கு அனுமதித்திருந்தார். அதேபோல் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட நகரசபை ஊழல் சம்பந்தமான கேள்விகளுக்கும் தகுந்த பதிலை வழங்கி இருந்தார்.

ஜனாதிபதி மைத்தரிபாலவின் ஆட்சியில் ஊடகவியலாளர்களை அழைத்து, அவர்களுக்கு கேள்வி கேட்பதற்கு அனுமதிக்கும் ஓர் நடைமுறை காத்தான்குடியில் தற்பொழுது இடம்பெற்றிருக்கின்றமை வரவேற்கத்தக்கது.

siyath
M. சியாட், நகரசபை உறுப்பினர்

நேற்றைய குறித்த நிகழ்வில், ஊடகவியலாளர்கள் காத்தான்குடி நகரசபையின் ஊழல், மோசடிகள் பற்றிய கேள்விகளை அடுக்கிக்கொண்டே போயினர்.

ஊடகவியலாளர்களின் கேள்விகள், பொதுமக்கள் இவ்வளவு காலமும் கேட்கக் காத்திருந்த கேள்விகளாகவே அமைந்திருந்தன.

இவ்வாறான கேள்விகளை கடந்த காலங்களில் கேட்க முடியாத ஆட்சி சூழல் இலங்கையிலும் எமது ஊரிலும் காணப்பட்டது.

ஆனால், இருள் மேகங்கள் அகன்று இன்று, குற்றங்களையும், தவறுகளையும் சுட்டிக்காட்டி, கேள்விகளைக் கேட்கும் தருணம் காத்தான்குடி ஊடகவியலாளர்களிடம் எழுந்திருப்பதை பாராட்டாமல் இருக்க முடியாது.

urban (2)

நகரசபை உறுப்பினர் சியாட்டின் உரையைவிடவும், ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளிலேயே பல இரகிசியங்கள் வெளிக்கொணர்ந்திருந்தன.

தனது சொந்த வேலை, குடும்பம், நேரம் என்பவைகளை அர்ப்பணித்தும் மற்றும் பல தடங்கல்களையும், அழுத்தங்களையும் கடந்த காலங்களில் கடந்துவந்த காத்தான்குடி ஊடகவியலாளர்கள் மரணித்துவிட்டதாக சிலர் அர்ப்ப காரணங்களுக்காக விமர்சித்திருந்தனர்.

காத்தான்குடி ஊடகவியலாளர்கள் மரணிக்கவில்லை, அர்ப்பணிப்புடன் அவர்களது பணி தொடரும் இன்ஷாஅல்லாஹ்.

சகோதரர் சியாட் முன்வந்து ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்ததுபோது, காத்தான்குடியைப் பிரதிபளிக்கும் பொதுநிறுவனங்கள், பிற அரசியல்கட்சிகள் ஆகியனவும் இவ்வாறான சந்திப்புக்களை ஏற்படுத்தி, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்க முன்வரவேண்டும்.

அப்போதுதான் அசுத்தம் நீங்கி, சுத்தம் வெளிப்படும்.

Published by

Leave a comment