மட்டகளப்பில் படகு கவிழ்ந்ததில் ஒருவரை காணவில்லை

boat riverமுஹம்மது பஹத்

மட்டக்களப்பு: மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமீன்மடு முகத்துவாரம் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவர்களின் படகு கவிழ்ந்ததால் ஒருவர் காணாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று மாலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மூன்று பேர் படகில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது படகு கவிழ்ந்ததன் காரணமாக, மூன்று பேரில் இருவர் தப்பியுள்ள நிலையில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

காணாமல் போனவர் மட்டக்களப்பு கறுவப்பங்கேணியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான தர்மலிங்கம் விஜயகுமார் (40வயது) என பொலிஸார் தெரிவித்தனர்.

இவரை தேடும் பணியில் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைநடவடிக்கைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Published by

Leave a comment