மரதன் ஓடிய 15 வயது மாணவன் வீதியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

marathonஅம்பலாந்தோட்டை: மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட 15 வயது மாணவர் ஒருவர் வீதியில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று அம்பலாந்தோட்டையில் நேற்று நடைபெற்றுள்ளது. அம்பலாந்தோட்டை போலான மகா வித்தியாலயத்தில் 10 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் 15 வயது மாணவன் சமோத் சத்ஸர என்ற மாணவனே இவ்வாறு பரிதாபமாக மரணமாகியுள்ளார்.

நேற்றுக் காலை மேற்படி மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகின. இதன்போது முதலாவதாக மரதன் ஓட்டப் போட்டிகள் நடைபெற்றன. குறித்த மாணவர் இப்போட்டியில் கலந்து கொண்டு ஓடும் போதே திடீரென வீதியில் மயங்கி விழுந்துள்ளார். குறித்த மாணவரை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்ற போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

marathon

குறித்த மாணவர் மரதன் ஓட்டப் போட்டிக்கு பங்குபற்றுவதற்கு முன்னர் மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதழ் பெறப்பட்டதாக பாடசாலை அதிபர் கருணாரட்ண தெரிவித்துள்ளார்.

death1[1]

Published by

Leave a comment