விம்பிள்டன் ஆங்கில பாடசாலையின் 2வது ஆண்டு வருடாந்த நிகழ்வு

unnamedபழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் விம்பிள்டன் ஆங்கில பாடசாலையின் 2வது ஆண்டு வருடாந்த நிகழ்வு 06-02-2015 வெள்ளிக்கிழமை விம்பிள்டன் ஆங்கில பாடசாலையில் இடம்பெற்றது.

விம்பிள்டன் ஆங்கில பாடசாலையின் தலைவர் எம்.ஐ.எம். உமர் பாரூக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் வலயக் கல்வி பணிப்பாளர் கே. பாஸ்கரன் கலந்துகொண்டதோடு கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம். இஸ்மாலெவ்வை கலந்து கொண்டார்.

இதன் போது மேற்படி ஆங்கில பாடசாலையில் போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு அதிதிகளினால் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு விம்பிள்டன் ஆங்கில பாடசாலை மாணவர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் பல்வேறு கலை நிகழ்வுகள் மேடையில் அரங்கேற்றப்பட்டன.

இந்நிகழ்வில் முன்னாள் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிரின்ஸ்ஜி காசிநாதர், முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் முபீன், முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஏ.ஜி.எம். ஹாரூன் உட்பட மதப் பெரியார்கள், கல்வியலாளர்கள், புத்திஜீவிகள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment